பக்கம்:புதிய பார்வை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 . புதிய பார்வை

மெய்க்குங் கிருத யுகத்தினேயே

கொணர்வேன், தெய்வ விதியிஃதே '

என்று விநாயகர் நான்மணிமாலையில் தான் சூளுரைத்துக் கொண்டதை நிரூபிக்கிருன்.

கிருத யுகத்தின் இலட்சணத்தைப் புதிய ருஷ்யாவிற்கு வாழ்த்துக் கூறும்போது விளக்கினன். தன் கவிதையின் கிருதயுக லட்சியத்தை இங்கே விநாயகர் நான்மணிமாலையில் இப்படி அழகாகக் கூறி வைத்துவிட்டான். ஜான்ஸ் னுடைய கடையில் மீன்களுக்கும் திமிங்கிலங்களின் ஆற்றல் வருமென்பார்களே, அதுபோல் பாரதியின் கவிதை கடை யில் மட்டுமல்லாமல் வசன நடையிலும் தமிழுக்கு ஒரு புதிய உத்வேகம், புதிய சக்தி எல்லாம் வருகின்றன. தன் முன் பிருந்த கவிஞர்களைக் கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்' என்று கொண்டாடுவதோடு தன் சமகாலத்து இந்தியாவில் இருந்த கவிஞர், கலைஞர் எல்லாரையும் கொண்டாடுகிருன் பாரதி, தேசத் தலைவர் கள் என்ற பெருமையோடு மஹாத்மா, குரு கோவிந்தர், தாதாபாய், பூபேந்திரர், திலகர், லஜபதி, வ. உ. சி. போன் ருேரைக் கொண்டாடும் பாரதி, கலைஞர் என்ற பெருமை யோடு ரவி வர்மா, சுப்பராம தீட்சிதர் ஆகியோரைக் கொண்டாடுகிருன். உ. வே. சா. ஐயர், சகோதரி நிவேதிதா அபேதாகங்தா ஆகியோரையும், கவிஞர் என்ற முறையில் தாகுரையும் புகழ்கிருன் பாரதி. இப்படித் தேசிய வீரர் களையும், காட்டையும் புகழ்ந்து அவன் பாடிய ஒவ்வொரு கவிதையும் பழைய தமிழின் புறப்பொருள் துறைகளில் ஒவ்வொன்ருக அமைதி சொல்லத்தக்க இலக்கண ஒழுங்கும் உடையனவாயினும், அங்தப் பழைய துறைகளினும் நவீன மான உணர்வும், நவீனமான சொற்பிரயோகமும், எல். லாம் உடைய இவை காலத்தாற் சிறந்து பொலிகின்றன. மழை, காற்று, அக்கினிக் குஞ்சு, கவிதைக் காதலி, மது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/46&oldid=598036" இலிருந்து மீள்விக்கப்பட்டது