பக்கம்:புதிய பார்வை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் னு ைர

நவபாரதி பிரசுரத்தின் இரண்டாவது வெளியீடு இது. இலக்கியம், சமூகம், கற்பனை, தமிழ்கடை, கவிதை, ஆராய்ச்சி ஆகிய பல்வேறு மறுமலர்ச்சித் துறைகளில் புதிய பார்வை தேவைப்படுகிற காலம் இது. விஞ்ஞான பாதிப் பாலும், பொருளாதார அழுத்தத்தாலும் ஒவ்வொரு துறை யிலும் புதுப்புதுப் பார்வை ஏற்படுவது தவிர்க்க முடியாத தாகிறது. அப்படிப் புதிய பார்வைகள் இத்தொகுதியில் உள்ள கட்டுரைகளில் உண்டு. தமிழ் நாவல், தமிழ்ச் சிறுகதை, தமிழ் மொழிபெயர்ப்பு, தமிழ்க் காவியங்கள். தமிழ்ச் சமூக வாழ்க்கை ஆகிய ஒவ்வொன்றைப் பற்றியும் என்னைப் பொறுத்தவரை நான் பார்த்த புதிய கோணத்தில் இத்தொகுதிக் கட்டுரைகளை இணைத்துள்ளேன்.

கவிதையில் கிருதயுகமும், தமிழ் நாவலைப் பற்றிய கட்டுரையும் தமிழ்நாடு வாசகர் பேரவை மாநாடுகளுக் காகத் தனியே தயாரிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை களாகும். அவற்றை இத்தொகுதியில் இணைத்துள்ளேன்.

இரண்டாயிரம் ஆண்டு 1ளுக்கு முன்பு இலக்கியத் தைப் பற்றி நமக்கிருந்த பார்வை இன்று மாறிவிட்டது. மொழியைப் பற்றி-இலக்கண இலக்கியங்களைப் பற்றி எல்லாம் நம் பார்வை இன்று உலகளாவியதாக விரிவடைங் திருக்கிறது. அன்றைய கவிதைகளில் பெரும்பாலானவை அரச குடும்பங்களையும் அக் குடும்பத்தின் வாழ்வுகளுக்கு வாழ்த்தியும், மரணங்களுக்கு ம ன ம் இரங்கியுமே அமைந்தன. - -->

- இன்றைய கவிதைகளோ அந்த வழியிலிருந்து முற். அறிலும் மாறிவிட்டன. மொழியியல் ஆராய்ச்சியும், இலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/5&oldid=597954" இலிருந்து மீள்விக்கப்பட்டது