பக்கம்:புதிய பார்வை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 493

காலம் பாரதிக்குப் பின்பே வங்தது. "கிருதயுகத்தில் எல் லார்க்கும் எல்லாம் உரியவை' என்ற தத்துவம் எவ்வளவு. பொருத்தமாக இப்போது விளங்குகிறது பாருங்களேன். தமிழ்க் கவிதை, தமிழ் இலக்கியம், தமிழ் உணர்வு, யாவும் எல்லாத் தமிழரும் ஆர்வப்படவும் அக்கறை காட்டவும், கவலைப்படவும். பெருமைப்படவும் உரியவை என்ற கிலேயே பாரதிக்குப்பின் ஏற்பட்ட விளேவுதான். தற்காலத் தமிழ். இலக்கியத்தையே 'பாரதியுகத் தமிழிலக்கியம்' என்று. தான் நாம் பெருமையோடு கூறக் கடமைப்பட்டிருக்கிருேம். தேசிய சமூக, அரசியல் பாதிப்புக்களால் பாரதிக்குப் பின்பும் தமிழ் இலக்கியத்தில் பிளவுகள் பிரிவுகள், அபிப். ராய பேதங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனல் இத்தனை விளைவுகளுக்கும் காரணமான ஒரு மைல் கல்லாக ஒரு. திருப்பமாகப் பாரதிதான் இருந்திருக்கிருன் என்பது: உண்மை.

இன்று தமிழில் கவிதைகள் என்பன பத்திரிகைகளின் பொங்கல், புத்தாண்டு, பிறந்த தின-இறங்ததினப் பாடல். களுக்குரிய தேவை அம்சமாகிவிட்டது. பொதுப் பொருள் களேயோ, கிலேத்து கிற்கவல்ல அம்சங்களையோ பாடுகிறவர். கள் பொதுவில் இல்லை. மாருக உரைநடை தமிழின் சகல. துறைகளிலும் வேரூன்றி வளர்ந்து கொண்டிருக்கிறது. இங்த உரைநடையிலுள்ள அழகுக்கும் பாரதியுகக் கவிதை. தான் தாய்ச் சரக்காக கிற்கிறது. கவிதையில் உரைநடை யின் எளிமையை அளித்த பாரதி உரைநடையில் கவிதை. யின் வனப்பும் உத்வேகமும் அமையச் செய்தான். தான் கடத்திய இந்தியா பத்திரிகையின் மூலம் எதிர்காலத் தமிழ. னின் பத்திரிகைத் துறை எப்படி உள்ளுணர்வோடும், சத் தியத்தோடும் அமையவேண்டும் என்பதையும் பாரதி தமிழ. னுக்குக் குறிப்பாகப் புரிய வைத்திருக்கிருன் பாரதிக்குப் பல துறை வல்லமை உண்டு. பாரதி ஒரு பத்திரிகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/51&oldid=598046" இலிருந்து மீள்விக்கப்பட்டது