பக்கம்:புதிய பார்வை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£50 புதிய பார்வை

யாளன், பாரதி ஒரு சங்கீத ரசிகன், பாரதி ஒரு சீர்திருத்த வாதி, பாரதி ஒரு வேதாந்தி, பாரதி ஒரு தத்துவதரிசி, பாரதி ஒரு கதாசிரியன் - என்று இப்படி எவ்வளவோ அடுக்கிக் கொண்டு போகலாம். ஆணுல் பாரதியின் பெருமை களே அடுக்கிச் சொல்லி ஏனையோரை மிரட்டுவது அல்ல கம் நோக்கம். பாரதியை உணரச் செய்வதுதான் நம் நோக்கம். அதற்குச் சிலவற்றைச் சுட்டிக் காட்டினலே போதும். தமிழிலே கிருத யுகமாக மலர்ந்த கவிதை பாரதி ஆயுடையது என்னும்போது அதற்கு முன்பு தமிழ் எல்லார்க் கும் பொதுவாகாமல் இருண்டிருந்த கிலேயைத்தான் கலி :யுகமாகக் கூறுவது கருத்தே ஒழிய அதற்கு முன்னுள்ள தமிழ்ச் செய்யுட்களேயே கலியுகமாகக் கூறுவது கருத் தல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சொல்லி லும், கருத்திலும், புரட்சி விளேத்த தமிழ் பாரதியுடையது. அதல்ைதான் அதை எத்தனையோ பெயர்களால் புதுமைத் தமிழ், பாரதி தமிழ், நவீன தமிழ், மறுமலர்ச்சித் தமிழ் என்றெல்லாம் காம் புகழ்ந்து கொண்டாடியிருந்தாலும் .பாரதிக்கே பிடித்தமான ஒரு காம்பீர்யமுள்ள பதச் சேர்க் கையில்ை புகழ வேண்டுமானல் கிருதயுகத் தமிழ், தமிழில் ஒரு கிருதயுகம் என்றுதான் புகழ்ந்து பாட வேண்டும். இன்று வளர்ந்து வரும் தமிழிலே கவிதை உரைநடை இரு துறையிலும் சந்திரனேக் கிரஹணம் பிடிப்பது போல ஒரு பகுதி கச்சு இலக்கியங்கள் கறைப்படுத்தி வருகின்றன. இந்த நச்சு இலக்கியங்களே மட்டுமே கருதி இன்றைய தமிழைப் பாரதிக்குப் பின்னுள்ள இக்காலத் தமிழைக் கலியுகமாகக் கூறிவிடலாமென்று சிலர் கோபப்படுவதும் ஒரு நியாயமாக இருக்கலாம். இப்போது மறுபடியும் அந்தக் .கிருதயுகக் கவிதையைப் பார்க்கலாம். -

குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/52&oldid=598048" இலிருந்து மீள்விக்கப்பட்டது