பக்கம்:புதிய பார்வை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் பேசப்படுகிருர்

நூற்பயன்

திருக்குறளும் அதை இயற்றிய திருவள்ளுவரும் இப் போது, முன்பு எப்போதும் இல்லாதபடி அதிகம் பேசப்படு. கிரு.ர்கள். குறள் எதற்காக எழுந்த நூல்: பேசப்படுவ: தற்கு எழுந்த நூலா பாடி இசைத்து மகிழ்வதற்கு எழுந்த நூலா? விவாதித்துப் பட்டிமன்றம் நிகழ்த்து. வதற்கு எழுந்த நூலா? பின் எதற்காக எழுந்த நூல்? கடைப்பிடிக்கவும், அதன்படி ஒழுகவும் உண்டாக்கப்பட்ட நூலே இந்த நூற்ருண்டில் வெறும் மேடைப் பேச்சுப் புத். தகமாக ஆக்கி, அதனாலேயே மகிழ்ந்து கொண்டு இருக்கி ருேம். அறநூலுக்கும் காவியத்திற்கும் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு. விதித்தவற்றைச் செப்' என்றும், விலக்கியவற்றைத் தவிர் என்றும் சமூகத்துக்கு உபதேசிக் கும் கடமையையும், மேன்மையையும் உடையது அறநூல். நுகர்ச்சிக்கும் இலக்கிய இன்பங் துய்த்தற்கும், கயங்கள் காணுதற்கும் நெருக்கமும் உரிமையும் கொண்டாடுவதற். கும் உரியவை காவியங்களே. இந்த அநுபவ வரையறையை மீறி அறநூல்களை இலக்கிய நுகர்ச்சி நூல்களைப் போல் பயன்படுத்துவோர் தற்காலத்தில் அதிகமாகி வருகின்றனர். அறநூற் கருத்துக்களுள் (Ethics) காவியத்திற்கு (Epic) விதை கெல் போன்றவை. காவியப் பொருளான பாவிகம் (Central idea) அறநூற் கருத்துக்களுள் ஒன்ருக அமையு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/54&oldid=598052" இலிருந்து மீள்விக்கப்பட்டது