பக்கம்:புதிய பார்வை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 புதிய பார்வை

பதுமாக கடைபெறும் சிகழ்ச்சிகளே இன்று எங்கும் காண் கிருேம்; உணர்கிருேம்.

நூல் நோக்கம்

திருக்குறளிற் சொல்லப்படுவது போன்ற இதே திே களும் அறங்களும் உலகின் பல்வேறு அறநூல்களில் கூறப் பட்டிருந்தாலும் திருவள்ளுவரின் ஒரே சிறப்பு அதைப் பட்டுக் கத்திரித்தாற் போலச் சுருக்கமாகவும், தெளிவாக வும் கூ றி இருப்பதேயாகும். தமிழிலேயே திருக்குறள் கூறும் அறங்களேயே கூறுகிற வேறு சிறியதும் பெரியது மான அறநூல்கள் பல உள்ளன. அவற்றுக்கில்லாத சிறப்பு திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் எப்படிக் கிடைத்தது என்பதைச் சிறிது சிந்திக்க வேண்டும். அற நூற் கருத்துக்களைக் கூறுவதில் வள்ளுவர் மேற்கொண்ட இங்கிதமும், உலகியலறிவும் இணேயற்றவை என்பது மிக மிக முக்கியமான அம்சம். எதை அழுத்திச் சொல்ல வேண்டும், எதை அணைத்துச் சொல்ல வேண்டும், எதை எதோடு இணைத்து எப்படிச் சொல்ல வேண்டும் என் பதில் எல்லாம் வள்ளுவர் தமக்கு ஈடுஇணையில்லாமல் உயர்ந்திருக்கிரு.ர். -

விதித்தன செய்தலும், விலக்கியவற்றைத் தவிர்த்தலு, மாக மக்களே நல்வழிப் படுத்துவதே ஆசிரியர் திருவள்ளுவ ரின் கோக்கம் என்பதைப் பரிமேலழகர் உரைத் தொடக் கத்தில் கூறி இருக்கிரு.ர். திருக்குறளில் கூறிய நல்ல வற்றைக் கடைப்பிடித்த லும், அல்லாதனவற்றைத் தவிர்த் தலுமே திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் படிக்கிற வர்கள் செய்யும் கன்றி. ஆல்ை, இன்று நாடெங்கும் திருவள்ளுவர் பேசப்படுகிரு.ர். சிறிதளவும் கடைப்பிடிக்கப் படுவதில்லை. அப்படியே கட்ைப்பிடித்தாலும் கடைப் பிடிக்கிறவர்களின் தொகையோ மிகக் குறைவு. பேசுகிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/56&oldid=598056" இலிருந்து மீள்விக்கப்பட்டது