பக்கம்:புதிய பார்வை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணமும் அன்று பண்டிதர்களுக்கு மட்டுமே உரிமை, இன்ருே அத்துறை பொதுவாகவும் பெரிதாகவும் ஆகி யிருக்கிறது. எல்லாவற்றைப் பொறுத்தும் இன்று களம் விரிவடைந்திருக்கிறது. அதற்கு ஏற்பப் பார்வையும் விரிவடைய வேண்டும். விரிவடைங்திருப்பதை விரிவடைய வேண்டியதன் அவசியத்தை-இத்தொகுதியிலுள்ள கட்டு ரைகள் காண்பிக்கின்றன. -

என்னுடைய கட்டுரை த் தொகுதிகளில் இது கான்காவது. மொழியின் வழியே - கவிதைக் கலை - "சொல்லின் செல்வம் ஆகிய கட்டுரைகளுக்கும் இதற்குமே பார்வையில் வித்தியாசங்கள் உண்டு என்பதைப் படிக்கிற வர்கள் உணர்வார்கள். எவ்வளவு பழமையும், பாரம்பரி யமும் இருந்தாலும் சிங்தனையில் நவீனத் தன்மைகளை அங்கீகரித்துக் கொள்ளத் தவறக்கூடாது. அப்படி அங்கி கரிக்கத் தவறினல் ஒவ்வொரு துறையிலும் சிந்தனே மங்கமும் தேக்கமும்தான் நிலவும். சமூகத்திற்கும், காட் டிற்கும் அது நல்லதல்ல. . -

தமிழ் இலக்கியத் துறையிலும் மறுமலர்ச்சித் துறை யிலும் ஈடுபட விரும்பும் இளங் தலைமுறையினர் இந்தக் கட்டுரைகளைப் படிப்பதன் மூலம் பெரும் பயனே அடைய முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. அந்த நம்பிக் கையின் விகளவும் பயனும் இந்தக் கட்டுரைகளை எல்லாம் படிக்கப்போகிறவர்கள் மூலமாகவும், படித்து விவாதிக்கப் போகிறவர்கள் மூலமாகவும்தான் நிரூபிக்கப்பட இருக் கின்றன. அவ்வாறு நிரூபிக்க இருக்கிறவர்கள் யார் யாரோ அவர்கள் அறிமுகமானவர்களாக இருந்தாலும், அறிமுக மாகாத புதியவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இந்த நூலைப் படையல் செய்கிறேன்.

ఇఛ్ } 27. நா. பார்த்த சார தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/6&oldid=597956" இலிருந்து மீள்விக்கப்பட்டது