பக்கம்:புதிய பார்வை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 5%

மதத்தினர், எச்சமயத்தினர் என்பதுதான் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கிறதே ஒழிய, அவர் தெய்வ நம்பிக்கை உள்ளவர்' என்பது எல்லாரும் ஒப்ப முடிந்த கருத்தாகும். அதில் இரண்டாவது கருத்துக்கு இடமே கிடையாது. "தெய்வ கம்பிக்கை இல்லாத கல்விக்குப் பயனே கிடையாது’ என்று திடமாகக் கூறுகிறவர் திருவள்ளுவர்.

'கற்றதனுல் ஆய பயனென் கொல் வாலறிவன்

கற்ருள் தொழாஅர் எனின்" என்கிறது அவர் குறள். இன்ருே. தெய்வம், சமயம், ஒழுக்கம், கற்பிக்கிற ஆசிரியர், ஆள்கிற ஆட்சி, பெற்ருேர், பெரியவர்கள், பெண்கள், எதன் மேலும் யார் மேலும் கம்பிக்கையூட்டாத கல்வியைப் பார்த்து மேதைகள் மனங் குன்றிப் போய் வருங்துகிருர்கள். தெய்வ நம்பிக்கை இல்லாமலும் வள்ளுவரைப் போற்றிப் பேசலாம், ஒழுக்க மில்லாமலும் வள்ளுவரைப் போற்றிப் பேசலாம், கள்ளுண் னமையில் கம்பிக்கையின்றியும் வள்ளுவரைப் போற்றிப் பேசலாம் என்பதை எல்லாம் காண்கிருேம். எங்த நல்ல கொள்கையையும் முழுமையாக நம்ப வேண்டியதில்லை. ஒரு விகிதாசாரத்துக்கு மட்டும் நம்பிளுல் போதுமென்ற மனப் பான்மை எல்லாத் துறையிலுமே எப்படியோ புகுந்து விட்டது. நம்புவது வேறு, செய்வது வேறு என்ற கிலே பெரும் பிழையாகக் கருதப்படாத காலத்தில் காம் வாழ் கிருேமோ என்றுகூடப் பயமாயிருக்கிறது. சொக்கத் தங்கமே தங்கமா, பதின்ைகு காரட் தங்கமே தங்கமா என்ற கேள்வியைப் போன்றது. இது. ஒழுக்கத்திலும் பதிலுை காரட் ஒழுக்கமே போதும் என்று கினேக்கிறவர் கள் இருக்கிருர்கள். ஆனல் திருவள்ளுவர் அப்படி கினைத்த வகையைச் சேர்ந்தவர் இல்லை. விகிதாசார கம்பிக்கை யோடு மட்டும் அவர் நூல் எழுதவில்லே. ஒழுக்கக் கேட் டையோ, தவறு செய்வதையோ ஒரு சதவிகிதம்கூட அவர் அனுமதிக்கத் தயாராயில்லே என்பது நன்ருகத் தெரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/61&oldid=598066" இலிருந்து மீள்விக்கப்பட்டது