பக்கம்:புதிய பார்வை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 புதிய பார்வை

ஆளுல் காந்தியமோ இந்தியாவின் அரசியல், சமுதாய ஆன்மிக பொருளாதாரப் பிரச்னைகள் அனேத்தையும் அளாவி கிற்கிற பெரும் தத்துவமாக இருக்கிறது. பழமை, புதுமை ஆகிய இரண்டு பெரிய தலைமுறைகளே இகணக்கும் பாலமாகவும் இருக்கிறது. இத்தகைய பெருமைமிகு தத்து வத்தைப் படைக்கும் தலைவர் வேறெங்கும் தோன்றவே இல்லை. ஐரோப்பாவிலும் பிற மேற்கு நாடுகளிலும் கூட அரசியலுக்கும் ஆன்மீகத்துக்கும் தொடர்பு கண்ட தலைவர் கள் இல்லை, அரசியல் என்ற கட்லுக்கு ஆன்மீகம் என்ற கட்டுப்பாடான கரையைக் கண்டவர் காங்தியடிகள்.

"தற்காப்புக்கு அடுத்தவனேக் கொல்லும் சக்தி தேவையில்லை. தானே சாவதற்குரிய மன உறுதிதான் தேவை."

என்று அரசியல் புரட்சிக்கும் ஒர் அமைதியான வழியைக் கண்டுபிடித்துக் கொடுத்தவர். அரசியல் இயக்கத்தில் ஈடு பட்டவனே தவம் செய்கிறவனின் பெருமையும், திருப்தியை யும், அடையச் செய்தவர் இந்தியாவிலேயே காங்கி ஒருவர் தான். - - -

"உற்றநோய் கோன்றல் உயிர்க்கு உறுகண்

செய்யாமை அற்றே தவத்திற் குரு."

என்று திருவள்ளுவர் தவக்கிற்குக் கூறிய இலக்கணத்தை அஹிம்ஸை, சாத்வீக எதிர்ப்பு, உண்ணு கோன்பு, ஆகிய வற்றின் மூலமாகக் கடைப்பிடித்து அரசியலுக்கே தவம் செய்யும் பெருமையைத் தேட முயன்ற புதுமைக்காகல்ே காந்தியத்தின் பெருமையைக் கொண்டாடலாம்.

- காந்தியத்தில் அமைந்திருக்கும் எளிமை காரணமாகவே அதைத் தவத்தோடு ஒப்பிடுவதும் இயலும். பெரிய நகரங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/72&oldid=598090" இலிருந்து மீள்விக்கப்பட்டது