பக்கம்:புதிய பார்வை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 7 :

களையும் பல இலட்சக் கணக்கான மக்களையுமே அரசியல் மாறுதல்களே விளைவிக்கவல்ல கருவிகளாக மற்ற நாடுகளின் அரசியல் தலைவர்கள் கினைத்து வங்த வேளையில்,

"கிராமங்கள் அழிந்தால் இந்தியாவே அழிந்து விடும்' என்று காட்டுப்புறத்து மக்களையும் சாதனமாகக் கருதி யழைத்துக் கொண்ட பெருமைக்குரியது காங்தியம் ஒன்றே.

காங்கியத் தத்துவத்தின் அடிப்படை இந்தியப் பண் பாட்டின் வழி வழி வக்த தன்மைகளேப் பலமாகக் கொண் டிருப்பது என்பதை இப்படிச் சில விளக்கங்களைக் கொண்டே இனங் கண்டுகொள்ள முடியும்.

"மிருக பலத்தில் எந்த மதத்தையும் காப்பாற்றிவிட முடியாது' என்று காக்தியம் நம்பியது. இவற்றையெல் லாம் சேர்ந்து கூர்ந்து கவனிக்கும் பொழுது காந்தியம் என்பது வேறெந்த அரசியல் தத்துவங்களையும்போல் இர வல் வாங்கப்பட்ட வெளிநாட்டுத் துரண்டுதலே உடைய தல்ல. - -

இந்த மண்ணிலேயே பிறந்து, இந்த மண்ணின் அசல் தேசியத் தன்மைகளே உடைய ஒரே தத்துவம் காந்தியம் தான் என்று தெரிகிறது. காந்தியடிகளுக்கு முன்பும் இந்த காட்டிலே சமுதாய, சமய ஆன்மீக சித்தாந்தங்கள் உண்டு. ஆனல் இந்த காட்டின் கருணே மயமான முதல் அரசியல் மதம் காக்தியம் என்ற பெயரில்தான் உண்டாயிற்று.

"அன்புடன் அஹிம்ஸையும் உள்ளத்தில்

ஊறியிருந்தால் அன்றிச் சேவை செய்வது என்

பது சாத்தியமில்லை." . என்று இந்திய அரசியல்வாதிக்கு மிக எளிய ஆரம்பப் பாடம் சொல்லிக் கொடுத்ததே காங்கியம்தான். அஹிம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/73&oldid=598092" இலிருந்து மீள்விக்கப்பட்டது