பக்கம்:புதிய பார்வை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி y3

துக் கொள்ள ஓர் சித்தாந்தம் வேண்டும். அப்படியே இக் தியாவும் தன்னுடைய அனைத்துலக அடையாளமாக. (International identty ) » evge:Gż stražr. Gäs ar boga காந்தியம் ஒன்றே.

காங்திக்கு முன்னும் பின்னும் இத்தகைய சமுதாய அரசியல் தத்துவங்களே ஆன்மீக அடிப்படையில் ஆக்கி" அளித்த தலைவர் வேறு எவரும் இல்லை. எனவே காந்தியம் ஒன்றே இந்தியாவின் கருணை மயமான அரசியல் மூலதன மாகிறது. சமதர்மம், சமதர்மம் என்று இப்போது யார் யாரோ புதிதாக வங்து இங்தியாவுக்குச் சொல்லிக் கொண்டி ருக்கிருர்கள். உலகுக்கே முதன்முதலாகக் கருணைமயமான சமதர்மத்தை அளித்த நாடு இந்தியாதான்.

'பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நாலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலே'

என்று வள்ளுவர் சொல்லாத சமதர்மமா?

'அன்பு என்பது எதையும் பிறரிடமிருந்து கேட்ப தில்லை; கொடுக்கிறது" என்று காந்தியம் கண்ட சம தர்மத்தைவிட பெரிய சமதர்மத்தையா அங்கிய நாடுகளின் வறட்டுத் தத்துவங்கள் கமக்குச் சொல்லிக் கொடுத்துவிடப் போகின்றன?” "தற்க்ாப்புக்கு அடுத்தவனேக் கொல்லும் சக்தி நமக்குத் தேவையில்லை. தானே சாவதற்குரிய மன உறுதிதான் தேவை' என்று காங்தியடிகள் கூறியிருப்ப திலுள்ள தியாகத் தன்மையை விடவா வெளிநாடுகளின் கிளிப்பிள்ளே சமதர்மம் பெரிது கமக்கு வேண்டியது காங்கிய சமதர்மமே. இந்தியா வறுமைப்படலாம். பல்லா யிரம் கோடி ரூபாய்கள் அங்கிய நாடுகளிடம் கடன் படலாம். அங்கிய நாடுகளால் ஏமாற்றப் படலாம். மோசம் செய்யப்படலாம். ஆனல் எல்லா ஆபத்துக்களிலிருந்தும் பிழைப்பதற்கு இன்னும் ஒரே ஒரு பெரிய மூலதனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/75&oldid=598096" இலிருந்து மீள்விக்கப்பட்டது