பக்கம்:புதிய பார்வை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 புதிய பார்வை

சார்ந்த பொருள்களாகத் தலைப்பில் இணக்கப்பட்டிருக் கிருர்கள். ஆகவே இந்தத் தலைப்புக்கு அடங்கி-அல்லது கொஞ்சம் அடங்காமல் எதை எதைக் கூறலாம் என்பதை முதலில் முடிவு செய்தாக வேண்டும்.

'பழங்தமிழ் இலக்கியம்' என்பது என்ன? அது எதைத் தொகுத்துச் சுட்டுகிறது? அதன் சிறப்பம்சங்கள் யாவை தற்காலத் தமிழ் எழுத்தாளர்களே அது எந்த அளவு பாதித்தது அல்லது பாதிக்கவில்லே?" என்பவற்றை ஒரு வாறு சொன்னலே இந்தக் கட்டுரையை நான் முடித்து விடலாம். தமிழ்நாட்டு மேடையில் இன்றுள்ள ஒரு பொது வான குறை, சொல்ல வேண்டியவற்றையும், சொல்லியே கீர வேண்டியவற்றையும் மறைத்துக்கொண்டு சொல்ல முடிந்தவற்றையும், சொல்ல இயல்பவற்றையுமே சொல்ல முடிவது. ஆனல் அந்த சம்பிரதாயத்தை உடைத்துச் சொல்லியே ஆக வேண்டியவற்றையும் இதில் சொல்லி விடலாம் என்று நான் கினேக்கிறேன். புதிய வளர்ச்சிகளைத் திரும்பிப் பார்க்கவே மறுக்கும் பழையவர்களும், பழமை யின் செழுமையை அறிய மறுக்கும் புதியவர்களும் இங்கே சரிசமமாக இருந்து வருகிருர்கள். இரு சாராரும் ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுக்க மறுப்பதில் கொஞ்சங்கூடச் சளைத்தவர்கள் இல்லை.

இருபத்தைந்து முப்பது ஆண்டுகளுக்கு முன் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாகிய செங்தமிழைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினுல் வங்தெதிரே தொழுதானே' என்ற கம்பராமாயணப் பாடலில் வந்தவன் யார், தொழுதவன் யார், என்பது பற்றிய விவாதங்கள், கொழுவுக் துன்னுசசி யும்' என்ற இலக்கணப் பிரமாண வாக்கியம் எதைக் குறிக் கிறது என்பது பற்றிய ஆராய்ச்சி ஆகியவற்றை மட்டுமே ஓர் இலக்கியப் பத்திரிகைக்குரிய அம்சங்களாகக் காண முடியும். அன்று அங்தப் பத்திரிகையில் 'சிறுகதையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/78&oldid=598102" இலிருந்து மீள்விக்கப்பட்டது