பக்கம்:புதிய பார்வை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 புதிய பார்வை

புலவர்கள், இலக்கியப் புலவர்களாகிய காவிய கதா விற்பனர்களைப் பூனைகள் போல் கருதிய காலமும் தமிழில் இருந்தது. செய்யுள் இயற்றுவது புண்ணிய கைங்கரியம்: வசனம் எழுதுவது கேவலம் என்று தமிழ் இலக்கியத் துறையினர் கினைத்த காலமும் இருந்தது. தெளிவில்லாத சுமாரான செய்யுள் இயற்றுவதைவிடத் தெளிவான கல்ல. வசனம் எழுதுவது-அதாவது உரைகடைப் படைப்பை உருவாக்குவது-சிறந்த காரியம் என்று ஒப்புக்கொள்கிற காலத்துக்கு காம் வேகமாக கடந்து வந்திருப்பதே பாராட் டத்தக்க காரியம், அப்படிப் பாராட்டத்தக்க ஒரு காலத் திலிருந்து பழமையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குவோம்

Bாம்.

பழந்தமிழ் இலக்கியம் :

மேளுட்டு இலக்கியத்திலும் ஆங்கில மொழியிலும் ’அகாடமிக் காலட்ஜ் இருப்பது புதுமை இலக்கியம் படைக்கப் பெரிதும் உதவும் என்றும் தமிழ் மொழியில் அகாடமிக் தகுதி இருப்பதுதான் தமிழில் புதுமை இலக் கியம் படைப்பதற்கு முதல் தடை என்றும் க, கா. சு. போன்றவர்கள் கூறுவது முற்றிலும் அசம்பாவிதமான வாதம் என்று கருதுகிறேன் கான். -

தமிழில் அகாடெமிக் தகுதி உள்ள சிலர் இங்கு கடந்து கொள்கிற விதத்தைப் பார்த்து அவர்கள் மேலுள்ள வெறுப்பில் க. கா. சு. இங்தப் பொருங்தாக் கருத்தைக் கூறி. யிருக்கலாமோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

பழந்தமிழ் இலக்கியப் பிரக்ஞை புதுத்தமிழ் வளர்ச்சி யில் பாடுபட விரும்பும் இன்றைய எழுத்தாளர்களுக்குப் பயன்படும் என்றே கான் கம்புகிறேன். சங்க இலக்கியம், கம்பராமாயணம் பிரபந்தங்கள், பாரதியுகக் கவிதைகள் வரை ஓர் அறிமுகம், அல்லது பொது அறிவு இருப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/80&oldid=598107" இலிருந்து மீள்விக்கப்பட்டது