பக்கம்:புதிய பார்வை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*超G புதிய பார்வை

யுங்கள். இரசியுங்கள். முத்தொள்ளாயிரத்தை முத்தொள் வrாயிரத்துக்காகப் படிக்கவேண்டுமே ஒழிய அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத தற்கால முக்கோணக் காதல் கதை ஒன்றில் செயற்கையாக மேற்கோள் காட்டுவதற்

கென்றே அதைப் படிக்க வேண்டியதில்லை. -

‘எங்கே கம்மைத் தமிழ் தெரியாதவர்களென்று சொல்லி விடுவார்களோ? என்று மயங்துகொண்டே பழங் தமிழ் இலக்கியத்தை எழுத்தாளர்கள் படிப்பதையும் பேசு வதையும் நான் விரும்பவில்லை. தமிழிலக்கியத்தைப் படிப் பதையும், இரசிப்பதையும் அவர்கள் சுபாலமான கடமை யாக ஏற்பதையே நான் விரும்புகிறேன். அதுதான் தமிழுக் குச் செய்யும் நியாயமான மரியாதை. மிகக் கடினமான -மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் பண்டிதர் பட்டத்தையும், மிகச் சுலபமான சென்னைப் பல்கலைக் கழகத்து வித்துவான் பட்டத்தையும். முதற் பரிசுடனும், டிஸ்டின்க்ஷனுடனும் பெற்றுள்ள கான் அவற்றை வைத்து யாரையும் மிரட்ட .கிணைத்ததில்லை. தமிழின் மேலுள்ள ஆசையாலும், இரசனை யாலுமே இவற்றைப் படித்ததால் பரீட்சை கொடுத்ததும் தேறியதும், பரிசு பெற்றதும் இன்று எனக்கு மறந்து விட்டது. தமிழ் மட்டும்தான் இப்போது எனக்கு கினை விருக்கிறது. ஆனால் இப்போது சில எழுத்தாளர்கள் யாரையோ திருப்தி செய்வதற்காக நடுகடுவே குறள் போட்டு எழுதுவதையும், கதையை விட்டுவிட்டுக் கருத் துரை தருவதையும் பார்த்தால் பழங்தமிழ் இலக்கியப் பயிற்சியைவிடப் பழங் தமிழ் இலக்கியப் பயிற்சியுள்ளது போல் வேடமிடுவதுதான் மிரட்டவும், ஏமாற்றவும் பயன் படுமோ என்றுகூடத் தோன்றுகிறது.

தற்காலத் தமிழ் எழுத்தாளர்களில் பலருக்குப் பழங் தமிழ் இலக்கியப் பயிற்சி மட்டுமல்ல (எந்த மொழியிலும்) வெறும் இலக்கியப் பயிற்சியே இல்லாததால் நல்ல அடிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/82&oldid=598111" இலிருந்து மீள்விக்கப்பட்டது