பக்கம்:புதிய பார்வை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38.2 புதிய பார்வை

"வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த காலன்னேனே'

என்று புறநானூற்றில் அதிகமான ஒளவையார் புகழ்ந்த பாட்டில் இலக்கியத்தில் சொற்ருெடுப்பு முறையைக் கருத் திலுைம் சொல்லிய முறையிலுைமே விளக்கியிருக்கிரு.ர். இப்படி ஒரு செறிவு வசனத்திற்கும் வேண்டும். பழந்தமிழ் இலக்கியப் பிரக்ஞை அதற்கு உதவும் என்று ஒவ்வொரு

தற்காலத் தமிழ் எழுத்தாளனும் கம்ப வேண்டும்.

ஒரு காரை ஒட்டுபவனுக்கு ஸ்டியரிங், ஆக்ஸிலேடர். கிளச் பெடல், பிரேக், பெடல் எல்லாம் எங்கெங்கே இருக் கின்றன என்பது கிச்சயமாகத் தெரிக்தே ஆகவேண்டி யிருப்பதுபோல் வாக்கியம் எழுதுகிறவனுக்கு வாக்கியத்தை வடிவுபடுத்தும் வகை, துரிதப்படுத்தும் விதம், கிறுத்தும் வழி, எல்லாமே மொழிப் பயிற்சியோடு தெரிந்திருக்க வேண்டும். இன்ருே தமிழில் வாக்கியம் எழுதத் தெரியாத வர்கள் கவிதையும், கவிதை எழுதத் தெரியாதவர்கள் மகா .காவியமும் துணிந்து எழுதிக் கொண்டிருக்கிரு.ர்கள்.

தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் பழங்தமிழ் இலக்கியப் பிரக்ஞை மட்டுமல்ல, எங்த இலக்கியப் பிரக்ஞை ஆயுமே இல்லாதது கவலையளிப்பதாயிருக்கிறது. காம்தான் வாஷிங்டனில் திருமணங்களையும் லண்டனில் சாங்தி முகூர்த்தங்களையும், மைலாப்பூர்க் குளத்தில் ஸோபியா லாரன் குளிப்பதையும் எழுதி அபாரப் புதுமைகளைப் படைத்து விட்டோமே? கமக்கு எதற்கு இலக்கியப் பிரக்ஞை என்கிறீர்களா? அப்படிக் கேட்டுப் பயனில்லை. மலையாளிகளுக்கும், வங்காளிகளுக்கும் அவர்களுடைய சில ஆாருண்டு வரலாறே உள்ள மொழியின் பழைய இலக்கியங் களில் உள்ள பிரக்ஞைகூட மிகத் தொன்மையான வரலச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/84&oldid=598115" இலிருந்து மீள்விக்கப்பட்டது