பக்கம்:புதிய பார்வை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4 புதிய பார்வை

தில்ை ஆகிய முழு கன்மைகளையும் தற்காலத் தமிழ் எழுத் தாளர்கள் அடைய வேண்டும் என்ற ஆசையிலேயே இதனேச் சொல்கிறேன். புதுமையை வெறுப்பவர்களின் திண்டாமையும் போக வேண்டாமா என நீங்கள் கேட்பது. காதில் விழுகிறது. அப்படி வெறுப்பவர்கள் புதிய காலத் திலேயே கம்மோடு வாழ்பவர்களாதலால் அவர்களாகவே. மாற வாய்ப்புண்டு. அல்லது அழிய வாய்ப்புண்டு. பார் வைகள், வளர வேண்டும் அல்லது மாறவேண்டும். இரண்டு: மில்லாவிட்டால் அழியவாவது வேண்டும்.

பழந்தமிழ் இலக்கியத்தில் பிரக்ஞை வேண்டுமென் றேனே தவிர காவலில் நாவலுக்குச் சம்பந்தமில்லாமல் காதலன், காதலி, வேலைக்காரன், எல்லாரும் குறள் பேசிக் கொண்டிருக்கச் செய்வதற்காகப் பழங்தமிழ் படிக்கச் சொல்லவில்லே. குறளே கமக்காகப் படிப்போம். கதை. யைக் கதைக்காகப் படைப்போம். தமிழை மொழிக்காகப் படிப்போம். இலக்கியத்தை இலக்கியத்துக்காகப் படைப் போம்.

பெறுவது, தருவது என்ற அடிப்படையில் தமிழ் எழுத்தாளர்களின் தற்கால வளர்ச்சி இருக்கவேண்டும். தருவது மட்டுமே இருந்தால் வறண்டு போகும். பெறுவது. மட்டுமே இருந்தால் வெறும் மேதா கர்வம்தான் மிஞ்சும். இரண்டும் கலந்த எதிர்காலமே தற்போதைய தமிழ். இலக்கிய ஆசிரியர்களுக்கு வாய்க்க வேண்டுமென்று ஆசைப். படுகிறேன் கான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/86&oldid=598120" இலிருந்து மீள்விக்கப்பட்டது