பக்கம்:புதிய பார்வை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 7

காலம் என்பது மணிக்கொடி, கலைமகள், சக்தி, திரு. வி. க. வின் நவசக்தி, சங்திரோதயம், தேனி, கலா மோகினி, பொன்னி, ஆகியவற்றிலிருந்து தொடங்குகிறது. தமிழ் இலக்கியப் பத்திரிகைகளில் புதுமையும், செழிப்பும், பெருகிய காலம் இதுதான்.

மணிக்கொடி-காலம்

மணிக்கொடி, சுதந்திரச் சங்கு, சக்தி, தேனி, பாரதமணி, கலைமகள் அ. சீ. ராவின் சிங்தனே' காலத்துக்கு முந்திய இலக்கியப் பத்திரிகைகளான செங்தமிழ், தமிழ்ப் பொழில் போன்றவற்றில், ஒர் இலக்கண முடிவு பற்றிய விவாதமோ, ஒரு பழம் பாடலுக்குப் பொருள் காண்பதில் இருபெரும் புலவர்களுக்கிடையிலுள்ள கருத்து வேறுபாடோ, கல் வெட்டு, சாஸன ஆராய்ச்சிகளோ தான் இலக்கிய அம்சங் களாகக் கருதப்பட்டன.

ஆல்ை, மணிக்கொடி, சுதந்திரச் சங்கு, சக்தி, சிந்தனே, தேனி, கலைமகள், பிரசண்ட விகடன், குமார விகடன், ஹநுமான், ஹிந்துஸ்தான், சுதேசமித்திரன் வாரப்பதிப்பு அமுதசுரபி ஆகிய ஏடுகள் அந்த கிலேயை மாற்றி, சிறு கதை, நாவல், இலக்கியத் திறய்ைவு (Literary Criticism) புத்தக விமர்சனம் (Book Review) ஆகிய அம்சங்களேயும் இலக்கிய ஏட்டுக்குரியவைகளாக்கி வளர்த்தன. -

தமிழில் புனே கதை (Fiction) அம்சத்துக்கு இ ல க் கி ய 35.5@.go (Literary Merit) ஏற்பட இந்தப் பத்திரிகைகளே முதன் முதலில் பாடுபட்டன என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. புதுமை கஆளயும் சோதனை இலக்கியத் துறைகளேயும் (Experimental ways) வளர்க்க இந்த ஏடுகளின் காலத்துக்குப் பின்பே அதிக வாய்ப்புக் கிடைத்தது. இலக்கியப் போக்குகள் (Literary trends) உலக இலக்கியத் தரத்துக்குப் பேசக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/9&oldid=597961" இலிருந்து மீள்விக்கப்பட்டது