பக்கம்:புதிய பார்வை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 9歌

பல தமிழ் மக்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள்; புத்தக மாக மொழிபெயர்ப்புக்களேத் தேடிப் படிப்பவர்கள் தொகை மிக மிகக் குறைவு.

தமிழில் வெளி வங்திருக்கும் மொழிபெயர்ப்புக்களில் பலரால் புகழ்ப்பட்டவை காண்டேகரின் கதைகளுக்கான தமிழ் மொழிபெயர்ப்புக்கள். அடுத்த வரிசையில் சிறப்புக் குரியவை சரத்சங்திரர், தாகூர், தாராசங்கர் ஆகியோரு டைய நாவல்களின் மொழி பெயர்ப்புக்கள். சொல்லப் போனல் தமிழ்காட்டு வாழ்வுக்கும், சூழ்கிலேக்கும் புரிங் துணர்வுக்கும் மிக மிக ஏற்ற மொழிகளாக மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியவற்றைவிட, மராத்தியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட காண்டேகரின் காவல்கள் ஒட்டுதல் பெற்றுத் தமிழகத்தில் பரவியிருப்பது வியப்புக்குரியது. மொழிபெயர்ப்பின் வெற்றி 'விஷயத்தைப் புரிய வைப் பதன் வெற்றி'யாகவே இருக்க முடியும் என்பதற்கு இதுவே சரியான சான்று. விதிவிலக்காக ஒரு சில சர்வ தேசக் கதைகள் தமிழ் மொழி பெயர்ப்பாளர்களாலும், வாசகர்களாலும் அதிகம் கவனிக்கப்பட்டுள்ளன. கார்க்கி யின் அன்னே'யை ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் மொழி பெயர்ப்பாளர் மொழி பெயர்த்துள்ளனர். மொழிபெயர்ப் பும் பலரால் விரும்பிப் படிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு ஆசிரியர்களில் 'விக்டர் ஹ்யூகோ'வின் காவல்கள் தமிழர் களுக்கு ஒரளவு மொழி பெயர்ப்பாகி அறிமுகத்துக்கு வங் துள்ளன. மாபஸானின் சிறுகதைகளில் சிலவும் பலருக்கு மொழிபெயர்ப்பால் அறிமுகமாகியுள்ளன. டால்ஸ்டாய், கதைகளில் சிலவும், செகாவ் கதைகளில் மிகச் சிலவும் தமிழ் மொழிபெயர்ப்புக்களின் மூலமாகப் பரவியுள்ளன.

தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் மொழி பெயர்ப்பின் வெற்றிதான் மொழி பெயர்க்கப்படுவனவற். றின் வெற்றியாக இருந்து வருகிறது. பழக்க வழக்கங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/93&oldid=598134" இலிருந்து மீள்விக்கப்பட்டது