பக்கம்:புதிய பார்வை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 புதிய பார்வை

களும், ஒட்டுறவும் இல்லாத சர்வ தேச மொழி ஒன்றைத் தமிழுக்குக் கொண்டுவரும்போது நயமாகவும் கருத்து மாறு படாமலும் புரிய வைப்பதுதான் தமிழ் மொழி பெயர்ப் பின் கோக்கமாக அமையவேண்டும். அப்படி அமையாமல் மூலத்தைவிடக் கடினமாகத் தமிழ் மக்களே மருட்டும் நோக்குடன் வெளிவந்திருக்கும் மொழிபெயர்ப்புக்கள் எல் லாமே தோல்வியடைந்துள்ளன என்பதை ஒவ்வொரு புதிய மொழிபெயர்ப்பாளரும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

முறையான மொழி பெயர்ப்பு என்பது எந்த மொழியி லிருந்து வங்தது என்பதைவிட எங்த மொழியினருக்குப் புரிந்து கொள்ள எழுதப்படுவது என்பதை முக்கிய நோக்க மாகக் கொண்டது. மொழி பெயர்ப்பாளன் என்பவன் கல்ல கிலேக் கண்ணுடியைப் போன்றவன். சில கண்ணுடி கள் பூதங்காட்டும். சில கண்ணுடிகள் ஒரேயடியாகச் சுருங்கிச் சிறிதாக்கிக் காட்டும். இருவகைக் குற்றமுமின்றி அசல் கண்ணுடியாயிருக்கும் மொழிபெயர்ப்பே முறையான மொழிபெயர்ப்பாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/94&oldid=598136" இலிருந்து மீள்விக்கப்பட்டது