பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நமது அரசியல் சட்டம் நமது அரசியலை நாமே உருவாக்குவோம் இங்கே நான் எழுந்து நிற்கும் பொழுது, எத்தனையோ விதமான விஷயங்கள் என்மீது குவிந்து, என்னை அழுத்துவது போலத் தோன்றுகின்றது. காம் ஒரு சகாப்தத்தின் முடிவில் இருக்கிறேம்; மிகவும் சீக்கிரத்திலே காம் ஒரு புதிய சகாப்தத்தையும் தொடங்க இருக்கிறேம். என் மனம் இந்தியாவின் மகோன்னதமான பண்டைய வரலாற்றை நாடிச் செல்லுகின்றது, சென்ற 5,000 ஆண்டுகளாக உள்ள இந்தியச் சரித்திரத்தைப் பற்றிச் சிந்திக்கின்றது. அந்தச் சரித்திரத்தின் உதய காலமே உலக சரித்திரத் திற்கும் உதய காலம் என்று கொள்ளலாம். அன்று முதல் இன்றுவரை யுள்ள வரலாற்றில் என் மனம் இலயித்து நிற்கின்றது. அந்தப் பழமையெல்லாம் என் மீது கவிந்து எனக்கு உற்சாகமுட்டுகின்றது. அதே சமயத்தில் ஏதோ ஒரு விஷயம் எனக்குத் துயரத்தை யும் அளிக்கின்றது. நான் அந்தப் பழம் பெருமைக்கு உரியவன்தான ? நிகழ்காலம் என்ற கத்தியின் முனை யின் மேல் நின்றுகொண்டு, மாபெரும் பழமைக்கும், அதைவிடப் பெருமையுள்ள எதிர்காலத்திற்கும் இடையிலே நின்றுகொண்டு, அதிக உன்னதமான எதிர்காலத்தைப்பற்றி கான் சிந்தனை செய்யும்பொழுது எனக்கு ஒரளவு நடுக்கமுண்டாகின்றது, இந்தப் பெரும் பணியைப் பற்றி மலைப்பு உண்டாகின்றது.