பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 ஆற்றல் நிறைந்தது, எங்களுடைய சுதந்தரப் போராட்டத்திலிருந்தும், மகாத்மா காந்தியின் உபதே சங்களிலிருந்தும் பிறந்தது. காங்கள் முன்னேற்ற மடைந்து வளர்ச்சி பெறுவதற்குச் சமாதானம் கண் டிப்பான அவசியம் என்பதுடன், உலகுக்கும் அது முதன்மையான முக்கியத்துவ முள்ளது. அமைதியை எப்படிக் கா த் து வைப்பது? ஆக்கிரமிப்புக்குப் பணிந்து கொடுப்பதாலன்று, தீமையுடனே அரீதியு டனே சமாதானம் செய்து கொள்வதாலுமன்று. பேசிக் கொண்டே போருக்கு ஆயத்தம் செய்வது மன்று ! ஆக்கிரமிப்பை எதிர்க்கத்தான் வேண்டும். ஏனெனில் அது அமைதிக்குப் பங்கமாகும். அதே சமயத்தில், சென்ற இரண்டு யுத்தங்களின் பாடத்தையும் காம் ாகினேவில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்தப் பாடத் திற்குப் பின்னும், காம் பழைய வழியிலேயே போவது தான் எனக்கு ஆச்சரியமா யிருக்கிறது. எதிர் எதிராக இரண்டு வல்லரசுக் கோஷ்டிகள் உலகில் அமைந்து வரும் முறை, காம் தவிர்க்க வேண்டும் என்று விரும்பும் போராட்டத்தை விரைவிலே உண்டாக்கக் கூடியது. அது பயங்கரமான சூழ்நிலையை உண் டாக்குகின்றது, அந்தப் பயம் மக்களின் மனங்களே இருளடையச் செய்து, அவர்களைத் தவறன வழிகளில் செலுத்துகின்றது. வாழ்க்கையில் அச்சத்தைப் போல் கெடுதலானதும் பயங்கரமானதும் வேறில்லை எ ன் று தோன்றுகின்றது. ஐக்கிய காடுகளின் பெரிய ஜனதி பதி ஒருவர் கூறியுள்ளபடி, அச்சத்தைப் போல அஞ்ச வேண்டிய பொருள் வேறில்லை. -நியூயார்க் கொலம்பியா ப்ல்கலைக் கழகத்தில் நிகழ்த் திய சொற்பொழிவு, 17-10.1949.