பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகில் மற்ற நாடுகளுடன் சேராமல் துண்டுபட் டிருப்பதன்று. நாம் ஒதுங்கி யிருக்க விரும்பவில்லை. nாம் மிக நெருக்கமான தொடர்புகள் வைத்துக்கொள் ளவே விரும்புகிறேம். ஏனெனில் ஆரம்பம் முதலே நாம் உலகம் நெருங்கி ஒன்று சேரும் என்பதை உறுதி யாக நம்பி வருகிறேம், இறுதியில், ஒரே உலகம்' என்று சொல்லப்படும் முறையில், எல்லா நாடுகளும் சேரும் இலட்சியத்தையும் அடைவதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆனல் இந்தியா மற்ற நாடுகளு டன் பிணைக்கப்பட்டு, குறிப்பிட்ட ஒரு கூட்டத்தில் நின்று செயற்படுவதைவிட, தனித்து நின்று, கெருக் கடியான சந்தர்ப்பங்களில் தன் விருப்பம் போல் கடந்து கொள்வதுதான் உலக ஒற்றுமைக்கு அதிக நன்மை செய்ய முடியும் என்று நாம் தீர்மானித்துள் ளோம். - புதுடில்லியில் உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் நிகழ்த்திய சொற்பொழிவு, 22-3-1949. Hk #: Fo இந்தியா காட்டும் வழி உலக அரசியலுக்கு இந்தியா புதிதா யிருக்கலாம், இக் காலத்தில் அசுரர்களைப் போன்ற படை வலிமை யுள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் இராணுவ பலம் அற்பமானதா யிருக்கலாம். ஆனல் சிந்தன சக்தியிலும், அநுபவத்திலும் இந்தியா பழம் பெரு நாடு, வாழ்க்கை யாத்திரையில் அது பல நூற். ருண்டுகளாகத் துணிவுடன் முன்னேறி வந்துள்ளது. அதன் மீண்ட வரலாறு முழுதும் அது சமாதானத்திற். காகவே பாடுபட்டு வந்துள்ளது, இந்தியா செய்யும் ஒவ்வொரு பிரார்த்தனையும் சாந்தி ஏற்படவேண்டும். என்றே முடிவது வழக்கம். இந்தப் பழைய, ஆனல்