பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 தாக கான் கேள்விப்பட்டேன். அது முக்கியமான ஓம் அறிவிப்பாகும். ஆனால் ஐந்தாண்டுத் திட்டம் என்பதே காட்டின் பாதுகாப்புத் திட்டம்தான். இல்லையெனில், அது வேறு என்ன ? பாதுகாப்பு என்பது, துப்பாக்கி களையும் மற்ற ஆயுதங்களையும் ஏந்திக்கொண்டு, மனி தர்கள் சாலையில் மேலும் கீழுமாக கடந்துகொண் டிருப்பதன்று. இக்காலத்தில் பாதுகாப்பு என்பது, பாதுகாப்புக்குத் தேவையான தளவாடங்களையும் பொருள்களையும் உற்பத்தி செய்யத் தொழில் முறை யில் தயாரா யிருத்தலே யாகும். -லோகசபைச் சொற்பொழிவு, 2.1-3-1956. I* o o: திட்டம் தீட்டுதல் விஞ்ஞானத்தைச் செயற்படுத்துவதுதான் திட்ட மிடுதல். திட்டமிடுதல் வளைந்து கொடுக்கக் கூடிய தாக இருக்க வேண்டும் ; விழிப்போடு எப்பொழு தும் எச்சரிக்கையா யிருக்கவேண்டும். தொழில் அமைப்பு முறையில் மட்டுமின்றி, ஆட்சி முறைக்கும் இது பொருந்தும். -புதுடில்லி, இந்தியப் பொது ஆட்சிமுறை இன்ஸ்டிடியூட்டில் ஆற்றிய தலைமையுரை, 6-4-1957. o IŲ. M எல்லாத் துறைகளிலும் முற்போக்கு திட்டமிடுதலில் முக்கியமான அமிசம் சமரசப் படுத்தல்; தொழிலுக்கும் விவசாயத்திற்கும் இடை யில் சமாநிலை அமைத்தல், கனரகத் தொழிலுக்கும் மற்ற இயந்திரத் தொழிலுக்கும் இடையில் சமாகி2ல அமைத்தல், குடிசைத் தொழிலுக்கும் ஆலைத் தொழி லுக்கும் இடையில் சமநிலை அமைத்தல் என்று அது