பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 உணவு உற்பத்தியைப் பெருக்கப் பல வழிகள் இருக்கின்றன; அதிக நிலங்களைச் சாகுபடிக்குக் கொண்டு வரலாம்; பாசன வசதிகளைப் பெருக்கி அதிக நீர் கிடைக்கும்படி செய்யலாம்; தீவிரச் சாகு படி முறையையும் மேற்கொள்ளலாம். உற்பத்திப் பெருக்கத்திற்குரிய வழிகளில் தீவிரச் சாகுபடி முறை யே அநேகமாக முதன்மையானது என்று சொல்ல் லாம். ஒவ்வோர் ஏக்கரிலும் விளைவதைச் சற்று அதிக மாக விளையும்படி செய்தாலும்கூட, மொத்தத்தில் விளைவு அமோகமாகப் பெருகிவிடும். இப்பொழுது விளைவது மிகவும் குறைவு. மற்ற நாடுகள் செய்துள் ளது போல, நாமும் ஏன் விளைவைக் கூட்ட முடியாது என்ப்தற்குப் போதிய காரணம் கிடையாது. கம் குடியானவர்கள் கடினமாக உழைக்கக் கூடியவர்கள். ஆல்ை, சில சமயங்களில் அவர்களிடம் கல்ல விதை களோ, உரமோ, அல்லது வேறு அவசியமான பொருள் களோ, இருப்பதில்லை. அரசாங்கங்கள் நிச்சயமாக உதவி செய்ய முடியும். ஆனால், இறுதியான வெற்றி விவசாயிகள் தாங்களே தங்களுக்குச் செய்து கொள் ளும் உதவியில்ைதான் வரும். குடியானவர்களுடைய கூட்டுறவு சங்கங்களின் மூலம் அவர்களுக்குப் பொது வான கன்மைகள் அதிகமாக விளையும். - புதுடில்லியிலிருந்து ஒலிபரப்பிய பேச்சு, 14-6-1952. W H R