பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளும் ஒவ்வொரு முதலாளியும் பல தலைமுறைகளாகத் தொழிலாளர்கள் அனுபவித்து வந்த பயங்கரமான துன்பங்களையும், அவர்கள் நசுக்கப்பட்டுவந்த விவரத் தையும், சிறு குற்றங்களுக்காக அவர்கள் ஜன்ம தண்டனை விதிக்கப் பெற்று ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப் பெற்றதையும், தொழிற் சங்கங்கள் தங்கள் கூட்டு முயற்சிகளால் நாளடைவில் படிப்படியாகச் சில சாதாரண மனித உரிமைகளே-அவைகளை விசேட உரிமைகள் என்று நான் சொல்ல மாட்டேன்அடைந்தன என்பதையும் உணர வேண்டும் என்று கான் எண்ணுகிறேன். -கல்கத்தாவில் கூட்டு வர்த்தகச் சங்கத்தில் ஆற்றிய சொற்பொழிவு, 14-12-1953.

  1. 事 o:

20 கூட்டுறவு தனிமனிதரின் சுதந்தரமும் கூட்டுறவும் தனி நபரின் சுதந்தரத்தை நம்மில் பலர் போற்று கிருேம், அப்படிப் போற்றுவதில் அந்தச் சுதந்தரத் தையும் காப்பாற்றிக் கொள்ளவேண்டும், தனியார் இலாபமடைய வசதி செய்யும் சமுதாயத்தின் பிடியி லிருந்து தப்பித்துக் கொள்ளவும் வேண்டும் என்றல், வன்ன செய்வது ? இதற்குக் கூட்டுறவு இயக்கத்தின் தத்துவம் ஒரு பரிகாரமாகவும், ஒருபுது சமுகப் பாணி யாகவும் தோன்றுகின்றது. - -புதுடில்லியில் கூட்டுறவு காங்கிரஸில் ஆற்றிய சொற். பொழிவு, 12-4-1958. o * Mk