பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 இதை மூன்று ஆண்டுகளில் செய்ய வேண்டும் என்றும் சொன்னேம். பெரியவையும் சிறியவையுமாக, நம்மிடம் சுமார் 5,50,000 கிராமங்கள் இருக்கின்றன. இவை களுக்கு 2,00,000 கூட்டுறவுகள் அமைக்க வேண்டி யிருக்கும். சில கிராமங்கள் மிகவும் சிறியவை என் பதால், அவற்றை மற்றவைகளோடு சேர்த்து விடலாம். இந்த எண்ணிக்கை நினைக்கவே பயங்கரமான பெரிய எண்ணிக்கை யன்று. ஜனங்களுக்கு வசதிகள் செய் யும் இந்தக் கூட்டுறவுகள் வேலை செய்து வரும் பொழுது கூட்டுறவு விவசாயப் பண்ணைகளை மக்கள் ஆரம்பிக்க வாய்ப்பிருக்கும். இதற்காகச் சட்டம் செய்யவோ, கட்டாயப்படுத்தவோ, காம் விரும்ப வில்லை. ஜனங்கள் தாங்களாகவே முடிவு செய்து கொள்ளும்படி துண்டுவோம். இது வேறு விஷயம், இதில் நமக்கு உரிமையுண்டு, இதை நிச்சயமாகச் செய்யவும் உத்தேசித்துள்ளோம். -டிெ டிெ பயிற்சியும் கல்வியும் இன்றியமையாதவை கூட்டுறவு பற்றி ஒரு விஷயம் மிகவும் முக்கிய மானது. கூட்டுறவு இந்தியாவில் வெற்றி பெறும், அப் படி வெற்றி பெறுவதற்கு, அதைப் பரப்புவதற்கு முன்பே கவனமாகப் பயிற்சி யளிக்க வேண்டும், கல்வி யைப் பரப்ப வேண்டும். கூட்டுறவைத் தொடங்கி விட்டுக் கிராம ஜனங்களை நடத்தச் சொல்லுங்கள்' என்று சொல்லுவதில் பயனில்லை. இதுவரை நாம் பயிற்சி விஷயத்தில் போதிய அளவு சிரத்தை எடுத் துக் கொள்ளவில்லை என்பதை கான் ஒப்புக்கொள் கிறேன். நாம் மக்களுக்குக் கவனமாகப் பயிற்சி அளிக்க வேண்டும். அந்தப் பயிற்சியின் அளவைப்