பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வலிமை சிெயானது என்பதை உணர்ந்து கொண்டு, மற்றைக் கலாசாரங்களுடன் தாராள மனப்பான்மை யுடனும் சகிப்புத் தன்மையுடனும் பழகிவந்தது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக இந்தியா வின் பழங்காலச் சரித்திரம் முழுதும் அதன் கலாசாரத் தின் அடிப்படையான ஒருமைப்பாட்டையும், ஜீவ சக்தியையும், சூழ்நிலைகளுக்கு இசைவாகப் பொருந் திக்கொள்ளும் ஆற்றலையும் எடுத்துக் காட்டுகின்றது. இந்த ஜீவசக்தி இந்தியா (உலகிற்கு) அளிக்கும் செய்தியைக் கலை உருவாகவும், சிந்தனைகளாகவும், சமயமாகவும் தூரக் கீழ்த்திசை காடுகளுக்கு எடுத்துச் சென்றது; இது மலாசியாவிலும், ஜாவா, சுமத்திரா, ஃபிலிப்பைன், போர்னியோ ஆகிய தீவுகளிலும் பெரிய அளவில் இந்தியக் குடியேற்றங்கள் ஏற்படக் காரணமா யிருந்தது ; அந்த நாடுகளிலுள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பழம் பெரும் சிற்பச் செல் வங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன. -அமெரிக்கப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை, 1938. 2 இன்றைய இந்தியா தனிப் பெருங் தலைவரும் சூரர்களும் இன்றைய இந்தியா கழிந்து போன சமீப காலத் திய சரித்திரத்தின் விளைவாக மட்டுமன்றி, நம் காட்டு வரலாற்றின் ஆயிரக் கணக்கான ஆண்டுகளின் விளைவுமாகும். சிந்தனைகள், அநுபவங்கள், செயல்கள் ஆகியவை ஒன்றின்மேல் ஒன்றக அடுக்கடுக்காக