பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O7 வாழ்க்கையை நாம் முழுமையாக உணர முடியவில்லை இந்தியா, கிரீஸ் நாடுகளின் புராதன நாகரிகங் களைப் பற்றி நாம் படித்துப் பார்க்கையில், அக் த க் காலத்தில் அறிவுப் பெருக்கத்திற்குரிய வாய்ப்புக்கள் மிகவும் குறைவா யிருந்த போதிலும், மக்கள் தங்கள் அறிவுத் திறன்களை ஒன்றுசேர்த்து வாழ்க்கையைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்தார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் இவ்வளவு மனக் குழப்பமடையவில்லை. வாழ்க்கையை முழுமை யாக அவர்கள் கண்டு கொள்ள முடிந்தது. இத்தனைக் கும், இந்தக் காலத்தில் கல்லூரியில் சாதாரண உயர் வகுப்பு மாணவன் தெரிந்துள்ள அளவுக்குக்கூட அவர்களுக்கு விஷயங்கள் தெரிந்திருக்க மாட்டா. இது உண்மையா, தவற என்பது எனக்குத் தெரி யாது. ஏனெனில் பழமையை யாரும் சற்று அதிக மாகப் புகழ்வதே வழக்கம். நான் சொல்வது தவறக வும் இருக்கலாம். ஆயினும் ஒரு விஷயம் மட்டும் சரியானதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. அதாவது, இக்காலத்தவர்களாகிய காம் வாழ்க்கை யின் பல அமிசங்களையும் முழுமையாய்ப் பொருத்திப் பார்க்கும் ஆற்றலில்லாமல் இருக்கிறேம்; காம் எவ்வ ளவு சாதுரியம் பெற்றிருந்த போதிலும், எத்தனை விஷ யங்களைத் தெரிந்திருந்த போதிலும், நாம் உலக அறி வைப் பெறவில்லை. காம்(நாளுக்குங்ாள்) நெருங்கி வாழ் வதற்கு எத்தனையோ வசதிகள் பெருகி வந்த போதி லும், முற்காலத்து மக்களைவிட கம் மனங்கள் ஒடுங் கிப் போயிருக்கின்றன. காம் அதிவேகமாய்ப் பிரயா ணம் செய்கிறேம், போக்கு வரவு சாதனங்கள் பெருகி யிருக்கின்றன. நாம் ஒருவரை யொருவர் அதிகமாய்த் தெரிந்து கொள்கிறேம். ரேடியோ முதலிய பலதிறப்