பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 அல்லது ஒரு சொல்லிலிருந்து அறியலாம், அல்லது விசேடமாக அ வ ர து வாழ்க்கையைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். கலாசாரத்தைப் பற்றிப் பரவிவருகிற குறுகலான எண்ணம் ஒருவர் தலையி லணியும் தொப்பியைப் பொறுத்தோ, உண்னும் உணவு வகையைப் பொறுத்தோ, இவைபோன்ற சாதாரண விஷயங்களைப் பொறுத்தோ இருப்பதாக எண்ணுவது தவறு; இவைகள் ஒரளவு முக்கியம் என் பதை நான் மறுக்கவில்லை, வாழ்க்கை முழுவதையும் கருதிப் பார்க்கையில், இவைகளின் முக்கியத்துவம் அதிகமாயில்லை. -கொழும்பு பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு, 12-1-1950. 事 事 # ஒளி பரவட்டும்! சில மனிதர்கள் தங்கள் மனங்களையும் இறுக அடைத்துக்கொண்டு, மற்றவர்களும் அவ்வாறே அடைத்துக் கொள்ள வேண்டுமென்று கோரும் அள வுக்குக் குறுகிய வழியைக் கைக்கொள்வது பற்றி எனக்கு ஆச்சரியமா யிருக்கிறது. அவர்கள் எந்தப் புதிய விஷயத்தையும் புக விடுவதில்லை. இந்தியக் கலா சாரம் என்பதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிருர் கள். எனக்கும் கலாசாரத்தைப் பற்றிக் கொஞ்சம் தெரியும். கதவுகளை அடைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரசாரம் செய்பவர்களுக்குக் கலாசாரத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. (விலக்க வேண்டும் விலக்க வேண்டும் என்று) ஒதுக்கும் முறை ஒவ்வொன் றும் கலாசாரக் குறைவையே காட்டும்; (சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று) வரவேற்கும் மு ைற வளர்ச்சியைக் குறிக்கும். விஷயங்களை விலக்கித்