பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221 வளரச் செய்ய முயற்சி செய்யும் பொழுதுதான் எதிர்ப்பு ஏற்படுகின்றது. அத்துடன் கலாசாரத்திற்கே மாறுபாடான கருத்துக்களும் எழுகின்றன. அதாவது மனத்தை (வெளிக் கலாசாரத் தொடர்பில்லாமல்) ஒதுங்கியிருக்கும்படி செய்து, மற்ற வெளித் தொடர்பு களே யில்லாமல் வேண்டுமென்றே அடைத்து வைத் துக் கொள்ளும் முயற்சி நடைபெறுகின்றது. இந்தியா வின் சரித்திரத்தைப் பற்றிய என் கருத்து இது: வெளி உலகத் தொடர்புகளுக்கு இந்தியா தன் மனத்தைத் திறந்து வைத்துக் கொண்டிருந்த காலங்களில், அது வளர்ச்சியும் முன்னேற்றமும் பெற்றிருந்தது, அது மனத்தை அடைத்துக் கொள்ள முயற்சித்த காலங் களில், அது தளர்ச்சி யடைந்து, கீழ்நோக்கி இறங் கத் தொடங்கிவிட்டது. மனத்தை முட மூட, அது இயக்கமில்லாமல் தேங்கி கிற்கத் தொடங்கிற்று. தனி கபருடைய வாழ்க்கையைப் போலவே, ஒரு கூட்டம், தேசம், சமுதாயம் ஆகியவற்றின் வாழ்க்கையும் உயிர்த் துடிப்பும், மாறுதலும், வளர்ச்சியும் உள்ளவை களாம். ஜீவசக்தியோடுள்ள அந்த வளர்ச்சியை எது தடுத்து நிறுத்திலுைம், அது அந்த வாழ்க்கைக்கே தீமை யுண்டாக்கி, அதன் அடிப்படையைச் சிதைத்து விடுகின்றது. 1. / -புதுடில்லியில் இந்தியக் கலாசார உறவுகளின் கவுன்வி லின் தொடக்க உரை, 9-4-1950. o o HM