பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239 சத்திய வேட்கை அவர் (காந்திஜி) மனிதனின் மனத்திலும் இதயத் திலும் ஆதிக்கியம் பெற்றிருந்ததற்கு என்ன காரணம்? பின்னல் வரப்போகும் சகாப்தங்களே இதற்கு முடிவு கூற முடியும், அவருடைய ஒப்பற்ற தனிப் பண்பின் பல சாயைகளையும் பற்றி மதிப்பிடுவதற்கு காம் அவ ருக்கு மிகவும் சமீபத்தில் இருப்பதால், அது எளி தன்று, ஆனால் நமக்குக்கூட அவருடைய வாழ்க்கை யில் முதன்மையாக விளங்கியது சத்திய வேட்கை என்பது தெரியும். அந்த உண்மை, நல்ல இலட்சியங் களைத் தீய வழிகளில் ஒருகாலும் பெற முடியாது என் றும், வழி தவறயிருந்தால், முடிவும் தவருகிவிடும் என்றும் அவர் ஒய்வொழிவில்லாமல் சொல்லும்படி செய்து வந்தது. அவர் தாம் செய்ததில் ஏதாவது தவருனது என்று கண்டால், அதை வெளிப்படை யாகப் பொதுமக்கள் அறியும்படி ஒப்புக்கொள்ளுமாறு அவருடைய சத்திய வேட்கை செய்து வந்தது. அவர் தமது தவறுகளில் சிலவற்றை இமாலயத் தவறுகள் என்று கூறினர். தீமையையும்டஅகத்தியத்தையும் எங்கெங்கு கண்டாலும்,உஆவைகளுேடனதிர்த்துடகிம்க வம், அதல்ைடனன்னடவிளேவுகள்டஏற்பட்டாலும், அவற்றைப்பிடாருட்படுத்தாமலிருக்கவும் அந்தக்கத் திய வேட்கை அவரைத்-தாண்டிவந்தது. ஏழைகட்கும் திஇத்தப்பட்டவர்களுக்கும் ஊழியம் செய்வதையே அவருடைய வாழ்க்கையின் ஆசையாக விளங்கச் செய்ததும் அந்தச் சத்தியம்தான். ஏனெனில், ஏற்றத் தாழ்வும், பாரபட்சமும், அடக்கி வைத்தலும் உள்ள இடத்தில் அரீதியும், தீமையும், அசத்தியமும் இருக் கும். இவ்வாறு சமூக நிலையிலும், அரசியலிலும் உள்ள தீமைகளால் துன்பமடைந்தவர் அனைவருக்கும் அவர் மிகவும் வேண்டியவராகத் திகழ்ந்தார். எதிர்காலத்