பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 தில் மனித சமூகம் எப்படி யிருக்க வேண்டுமோ அதற்கு அவர் சிறந்த பிரதிநிதியாக இருந்தார். இந்த உண்மை அவரிடம் இருந்ததால், அவர் அமர்ந்திருந்த இடமெல்லாம் கோயிலாயிற்று, அவர் பாதம் படிந்த இடமெல்லாம் புனித பூமியாயிற்று. -புதுடில்லியிலிருந்து ஒலிபெருக்கிய சொற்பொழிவு, 14-2-64. புத்தருடைய வாய்மை விசாரணையாலும் பரிசோதனையாலும் கிருபிக்கக் கூடியதைத் தவிர வேறு எதையும் எவரும் கம்பக் கூடாது என்று புத்தர் கூறினர். மக்கள் சத்தியத்தை நாடிச் செல்ல வேண்டும் என்றும், வேறு ஒருவர் சொன்னதற்காக ஒன்றை உண்மையென்று ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றும், அப்படிச் சொன்னவர் புத்தரேயானலும் ஏற்கக்கூடாது என்றும் அவர் வேண் டினர். அவர் சகிப்புத் தன்மை, கருணை ஆகியவை பற்றிக் கூறியிருப்பதோடு, இதுதான் அவருடைய உபதேசத்தின் சாரம் என்று எனக்குத் தோன்றுகின் றது. அந்த உபதேசம் இன்றைக்குப் பயனற்றது. என்பதில்லை, அது நம்முடைய இந்த உலகத்திற்கு இப் பொழுது விசேட முக்கியத்துவமுள்ளது. -கல்கத்தாவில் கூடிய விஞ்ஞானக் காங்கிரஸில் சொற்பொழிவு, 14-1-1957. Hk 辜 書 உண்மை மிகப் பெரிது ! உண்மை தங்களுக்கு மட்டுமே உரித்தானது என்று விஞ்ஞானிகள் உரிமை கொண்டாடமுடியாது என்பதை