பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 றிய குறுகிய பூசல்கள் முடிவுற வேண்டும், வகுப்பு வேற்றுமை, சாதி வேற்றுமைகள் இல்லாத சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும், அதில் ஒவ்வொருவரும் தம் தகுதிக்கும் திறமைக்கும் தக்கபடி வளர்ச்சிபெற வசதி யிருக்க வேண்டும். முக்கியமாகச் சாதி என்ற சாபத்தீடு ஒழிக்கப்படும் என்று கான் நம்புகிறேன், ஏனெனில், சாதியை அடிப்படையாகக் கொண்டு, ஜன. நாயகமோ, சோஷலிஸமோ இருக்க முடியாது. -ஆஜாத் ஞாபகார்த்தச் சொற்பொழிவு, 1959. 3 எதிர்கால இந்தியா பழம் பெருமை போதாது பழம் பெருமைகளைப் பெற்றிருப்பதைப்போல் இலாபகரமாயும் உதவியாயும் உள்ள வி ஷ ய ம் வேறில்லை; ஆல்ை ஒரு தேசிய சமுதாயம் அந்தப் பெருமைகளையே பெரிதாகப் பேசிக்கொண்டு, காலேக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப்போல் அபாய கரமான விஷயம் வேறில்லை. ஒரு சமுதாயம் தன் முன்னேர்களைப் போலத் தானும் நடித்துக் கொண் டிருந்தால் முன்னேற முடியாது; புதிதாக உற்பத்தி செய்யும் ஆற்றலும், புதிதாகக் கண்டுபிடிக்கும் ஆற்ற லும், ஜீவசக்தி ததும்பும் செயலுமே ஒரு சமுதா யத்தை நிறுவுவன. -ஸாகோர் பல்கலைக் கழகச் சொற்பொழிவு, 30-10-52. Fo + #: சுதந்தரமான இந்தியா, தன்னிடமுள்ள ஏராள மான வசதிகளுடன், உலகத்திற்கும் மனித சமுதாயத்