பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245 வேண்டும். ஒர் உதாரணத்தைப் பார்ப்போம் : கிராமங்களில் பல மக்களுக்கு ஏதோ கஷ்ட ஈடுகள் கொடுக்கப் பெறுகின்றன, அல்லது ஒரு கிராமத்தில் கஷ்ட நிவாரணத்திற்காக ஒரு வேலை தொடங்கப் பெறுகின்றது. கஷ்ட ஈட்டையோ, உதவி நிதி யையோ விநியோகிக்கும் வேலை ஒரு சாதாரண அதி காரியிடம் ஒப்படைக்கப் பெறுகின்றது. இவைகளை விநியோகிப்பதில் எப்பொழுதுமே நீண்ட காலத் தாம தங்கள் ஏற்படுகின்றன, இனியும் ஏற்படும். நிதிகள் எவர்களுக்குப் போய்ச் சேரவேண்டுமோ அவர்களை அடைவதற்குள், பெரும்பாலும் காலியாகி விடும், அல்லது அவர்கள் பெருந் துன்பங்களை யெல்லாம் தாங்கிய பின்பு போய்ச் சேரும். இதைப் பற்றி காம் என்ன செய்யப் போகிருேம் ? ஒவ்வொருவரும் முற்றி லும் கண்யமானவராக மாறி, கால தாமதம் கேராமல் செய்கிறவரை, காம் காத்திருக்க வேண்டுமா? எல்லோ ரும் திருந்தும்படி காம் செய்ய வேண்டியதுதான். ஆனல் நாம் காத்திருக்க முடியாது. நிதிகளை விகி யோகம் செய்வதற்கு வேருெரு முறையை காம் கையாள்வதாக வைத்துக் கொள்வோம். கிராமத்தார் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டி வைத்து, கஷ்ட ஈடு சம்பந்தமாக அரசாங்கம் கிர்ணயித்துள்ள விகிதத் தைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம். இதல்ை இலஞ்ச ஊழல் குறையும். ஏனெனில் ஜனங் கள் அனைவருக்கும் உண்மையான தொகையின் அளவு தெரிந்துவிடும். இது எளிதாகச் செய்யக் கூடிய ஒரு காரியம். ஆனல் செய்யப் பெறுவதில்லை. எளிதான முறைகளில் காம் ஏன் வேலை செய்யக் கூடாது? ஜனங்களை அரசாங்க அலுவலகங்களுக்கு அழைத்து. அவர்களைத் திரும்பத் திரும்ப வரும்படி செய்வதை விட, அதிகாரி கிராமத்திற்குச் சென்று, கஷ்ட ஈடு பற்றிய அரசாங்கத்தின் முடிவை எல்லோருக்கும்