பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259 தென்றும் எண்ணுவதை நீங்கள் காணலாம். ஒருவர் தம் காட்டையும், தம் சொந்த மக்களையும் விரும்புவது இயற்கையே யாகும். அப்படிச் செய்யாதிருப்பது தான் இயற்கைக்கு மாறுபாடாகும். ஒருவருடைய தாயகத்தைப் பற்றிக் கொஞ்சம் பெருமைப்பட்டுக் கொள்வது நல்லதுதான். ஆனல் காமே உலகில் தலை சிறந்தவர்கள், நிகரற்றவர்கள் என்று எண்ணத் தொடங்குவது தவறு. உண்மை யென்ன வென்றல். ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மக்களினமும், போ ற்றத் தகுந்த குணங்களைப் பெற்றிருப்பதுதான்; அவைகள் வெற்றிகரமான பல காரியங்களைச் சாதித்துள்ளன. ஆல்ை, அவைகளுடைய வரலாற்றில் ஆகாத காலங்களும் இருந்திருக்கின்றன. இது, நாடுகளுக்கு மட்டுமின்றி, தனி நபர்களுக்கும் பொருந்துவதாகும். எவரும் நிறைவுடையவரில்லை; எவருக்கும் பலவீனங் களும், குறைபாடுகளும் உண்டு. எவரும் முற்றிலும் தீயோராக இருப்பதுமில்லை. நாம் அனைவரும் நன்மை யும் தீமையும் கலந்த கலப்புக்களாகவே இருக்கிறேம். ஆளுல் நாம் நம்மிடத்திலும் பிறரிடத்திலும் உள்ள கன்மையை வளர்க்க முயற்சி செய்வோம். -புதுடில்லியில் பல்கலைக்கழகங்களின் இளைஞர் விழாவில் பேசியது, 23-10-1955. o # + தேசியமும் சீர்திருத்த எதிர்ப்பும் எனது கன்பர் கனம் தியாகி, இராஷ்டிரபதி ச ைப க் கு ள் வ ரு ைக யி ல் காட்டப் பெற்ற மரியாதையை (மாற்றி யமைக்கும் நோக்கத்தில்) ஆட்சேபித்தார். அது அதிகமாக ஆங்கிலப் பாணி யைத் தழுவி யிருந்ததாக அவர் எண்ணினர். சங்குகள், அல்லது வேறு பழங் காலத்து வாத்தியங்