பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 மிகவும் அவசியம் என்று நாம் உணர்ந்ததால், காம் அதில் சேர்ந்து கொண்டோம். (பழைய) சர்வதேச சங்கம் பயனற்றுப் போயிற்று. ஐ. கா. சபை அதைப் போன்ற ஒரு முயற்சியா யிருப்பினும், இதற்கு அதிக மான ஆதரவுகளும், கற்குறிகளும் ஏற்பட்டதால், காம் அதில் சேர்ந்து கொண்டோம். ஐக்கிய நாடு களின் சபைக்குரிய பிரகடனம் மிக நேர்த்தியான உன்னதமான உரிமைப் பத்திரம் என்று நான் கருது கிறேன். - -பார்லிமெண்டுச் சொற்பொழிவு, 12-6-1952. o: iķi †: ஐ. நா. சபையும் காலனி ஆதிக்கியமும் குறைகள் இருந்த போதிலும், ஐக்கிய நாடுகளின் சபை ஒரு முக்கியமான வேலையைச் செய்து வருகின் றது. இன்றைக்கு அது இல்லை யென்றல், அதைப் போன்ற ஒன்றை அமைக்க எல்லா நாடுகளும் சேர்ந்து முன் வரக் கூடும். நான் ஐக்கிய நாடுகளின் சபைக்குத் தலைசிறந்த முக்கியத்துவம் உள்ளதாகக் கருதுகிறேன். ஆல்ை அது ஆரம்பத்தில் தான் கொண்டிருந்த அடிப் படைக் கொள்கைகளிலிருந்து விலகி, படிப்படியாக நாடுகளை அடிமைப்படுத்தி வைக்கும் காலனி’ முறையை மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் இறங்கியுள்ளது. இது அபாயகரமான மாறுதலாகும். அதைச் சமாதானத்திற்குரிய பெரிய சபையாக மதிப் பதை விட்டு, அதில் உறுப்புக் கொண்ட சில நாடுகள் அந்த ஸ்தாபனத்தின் மூலமே போர் தொடுக்கலாம் என்று காளடைவில் கருத முன் வந்துள்ளன. -டிெ. டிெ