பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 யும், வெற்றியையும் கொண்டு, நாங்கள் தனித்து ஒதுங்கி நிற்கவேண்டு மென்றே, எங்களையே முக்கிய மாகக் கருதிக்கொள்ள வேண்டுமென்றே தீர்மானிக்க வில்லை. மகாகாட்டின் ஒவ்வொரு முக்கியமான முடிவும், ஐக்கிய நாடுகளைப் பற்றியும், உலக விஷயங் களைப் பற்றியும், உலக இலட்சியங்களைப் பற்றியும் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. பாண்டுங்கிலிருந்து நமது மாபெரும் ஸ்தாபனமாகிய ஐக்கிய நாடுகளின் சபை புதிதாக வல்லமை பெற்றிருக்கிறது என்றே நாங்கள் கம்புகிருேம். இதல்ை ஆசியாவும் ஆப்பிரி காவும் அந்த உலகப் பொது ஸ்தாபனத்தில் நாளுக்கு நாள் அதிகமாகப் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஏற்படுகின்றது. -லோகசபைச் சொற்பொழிவு, 30-4-1955. Fo :* 事 போர்களை விட்டு ஒதுங்கியிருத்தல் நான் எவரையும் குறை சொல்லிப் பேச விரும்ப வில்லை. ஆசியாவில், நாம் நாடுகளாயினும் சரி, நபர்களாயினும் சரி, எல்லோரிடத்திலும் பல குறைகள் உள்ளன. நமது பண்டை வரலாற்றிலிருந்து இது தெளிவாகின்றது. இருந்த போதிலும், பழங்காலத் தில் ஐரோப்பா பல போராட்டங்களின் நிலைக்களனை கண்டமாகவும், இடர்கள் நிறைந்ததாயும், துவேஷம் நிறைந்ததாயும் இருந்து வந்தது என்று கான் கூறு கிறேன். ஐரோப்பாவின் போராட்டங்கள் தொடர்ந்து கடந்து வருகின்றன. அதன் யுத்தங்கள் இன்னும் கடந்து வருகின்றன. நாம் அதன் தேர்ச் சக்கரங் களில் பிணிக்கப்பட்டிருந்ததால், நாமும் இந்த யுத்தங் களில் இழுத்துச் செல்லப்பட்டோம். காம் இன்னும் ஐரோப்பாவின் கஷ்டங்களுடன் பின்னிக் கிடக்க