பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 அவரைத் தண்டித்தது முறையாயில்லை என்பதாகக் காரணம் சொல்லப்பட்டது. M # o இரண்டாவது விசாரணை 1922, மே 11-ந் தேதி நேரு இரண்டாவது முறை யாகக் கைது செய்யப் பெற்றர் அலகாபாத் ஜில்லா மாஜிஸ்திரேட்டின் மன்றத்தில் விசாரணை கடந்தது, மே 19-ந் தேதி, அவருக்கு இந்தியன் பீனல் கோடு 506-ஆவது பிரிவுப்படி 18 மாதக் கடுங்காவலும், மேற்படி 117|506 பிரிவுப்படி 18 மாதக் கடுங்காவலும், மேற்படி 116|385 பிரிவுப்படி 6 மாதக் கடுங்காவலும், இத் தண்டனைகளை ஏக காலத்தில் அநுபவிக்கவேண்டு மென்றும் தண்டனை விதிக்கப் பெற்றது. இத்துடன் இந்தியன் பீனல் கோடு 117-ஆவது பிரிவுப்படி ரூ. 100 அபராதம், அல்லது 3 மாதம் கூடுதலாகக் கடுங்காவலும் விதிக்கப் பெற்றது. அந்த நீதிமன்றத்தில் மே மீ 17-ந் தேதி நேரு அளித்த வாக்குமூலத்தின் முக்கியமான பகுதிகள் வருமாறு : "என் மீது சாட்டப் பெற்றுள்ள குற்றச்சாட்டுகளி லிருந்து என்னைக் காத்துக் கொள்வதற்காக நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. ஆனல் என் செயலைப் பற்றி நான் ஏன் அப்படிச் செய்தேன் என்பதன் காரணங்களையும், என் நிலைமையையும் விளக்கவே நான் இந்த வாக்குமூலத்தை அளிக்கிறேன். நான் குற்றவாளியா, இல்லையா என்பதை நான் கூற மறுத்து விட்டேன், சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்தோ, அல்லது வேறு விதமாகவோ, விசாரணை யில் நான் கலந்து கொள்ளவும் மறுத்து விட்டேன்.