பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O4 வரை மனம் வருந்தவில்லை, கழுவாய் தேடித் தன் வழிகளே மாற்றிக்கொள்ளவுமில்லை... இந்தியா சுதர், தரம் அடைந்தே தீரும்; அதைப் பற்றிச் சந்தேகமே கிடையாது. ஆனால் இங்கிலாந்து சுதந்தரமான இந்தியாவின் கட்பை விரும்பினால், அது தன் பாவங் களுக்கு வருக்தி, அவைகளை நீக்கிக்கொள்ள வேண்டும். அப்படியால்ைதான் அது எதிர்கால உலக அமைப்பில் இடம் பெற்றிருக்க முடியும். "...இந்தியா தன்னுடைய தலைசிறந்த மக்களில் இருபத்தையாயிரம் பேர்களைச் சிறைகளுக்கு அனுப்பி யிருப்பது போராட்டத்தைக் கைவிடுவதற்காக அன்று: இந்தியாவின் எதிர்காலம் உறுதியாயுள்ளது. எங்களில் நம்பிக்கை அதிகமில்லாத சிலர் சில சமயங்களில் ஐய முறலாம், தயங்கி கிற்கலாம். ஆனல் கற்பனை செய்து பார்க்கக் கூடியவர்களுக்கு இந்தியாவின் எதிர்கால ஜோதி இப்பொழுதே தெரியும். என் அதிருஷ்டத்தைக் கண்டு கானே வியப்படை கிறேன். சுதந்தரப் போராட்டத்தில் இந்தியாவுக்குத் தொண்டு செய்வதே பெரும் கெளரவம். அதிலும் மகாத்மா காந்தியைப் போன்ற ஒரு தலைவரின் கீழே: அவளுக்குத் தொண்டு செய்தல் இரட்டிப்பு அதிருஷ்ட மாகும். அருமைத் தாயகத்திற்காகத் துயரத்தைத் தாங்குதல் : ஒர் இந்தியனுக்கு இதைவிட வேறு பெரிய பேறு என்ன இருக்கிறது . இதைவிடப் பெரிய பேறு சுதந்தரத்திற்காக உயிர் விடுதல், அல்லது மாங்கள் கனவு காணும் சுதந்தரத்தை அடைதலாகும்." o o H மூன்ருவது விசாரணை முன் ருவது முறையாக நேரு கைது செய்யப் பெliறதும், சிறையில் அடைக்கப்பெற்றதும், விசாரிக்