பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305 கப் பெற்றதும், தண்டிக்கப் பெற்றதும், தண்டனை தள்ளுபடி செய்யப் பெற்றதும் எல்லாமுமே விசித்திர மானவை. இவை யெல்லாம் பஞ்சாபிலுள்ள நாபா என்ற சமஸ்தானத்தில் 1923-ல் நிகழ்ந்தவை. அப் பொழுது அங்கே காபா மகாராஜாவைச் சிம்மாசனத்தி லிருந்து இறக்கிவிட்டு, பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் காந்திஜியின் தலைமையில் இந்திய தேசிய இயக்கம் தீவிரமாக கடந்து வந்ததால், பஞ்சாபிலிருந்த சீக்கியர்களும் அதில் விசேடப் பங் கெடுத்துக் கொண்டனர். அத்துடன் அவர்கள் தங்கள் சீக்கிய சமயத்தையும் புனருத்தாரணம் செய்து சீரிய நிலையில் அமைக்க முற்பட்டனர். சீக்கிய மடாலயங்களிலும் ஆலயங்களிலும் ஏற்பட்டிருந்த ஊழல்களை நீக்கி, அவைகளில் ஆதிக்கியம் கொண் டிருந்த முறை தவறிய 'மகக் து’களை வெளியேற்றவும் அவர்கள் முற்பட்டனர். இந்தச் சமய ஸ்தாபனங் களுக்குக் குருத்வாரங்கள் என்று பெயர். குருத்வாரங் களைப் புனிதமாக்கும் இயக்கம் வலுக்கவே, அரசாங் கம் சீக்கியர்களை அடக்கி ஒடுக்க முற்பட்டது. அப் பொழுதுதான் காபாவிலிருந்த சீக்கிய மகாராஜாவும் பட்டத்தை இழந்தார். சீக்கியர்கள் அவருக்கு மறு படி இராஜ்யத்தை அளிக்க வேண்டுமென்று கிளர்ச்சி செய்தனர். சீக்கியர்களில் கூடுதலான விரதங்களே மேற் கொண்டு மகா வீரத்துடன் விளங்கியவர்கள் அகாலி யர். அவர்கள் கூட்டம் கூட்டமாக அரசாங்கத்தை எதிர்த்து, காந்திஜியைப் பின்பற்றி அஹிம்சை முறை யில் சத்தியாக்கிரகம் செய்து வந்தனர். ஒழுங்கீன மான மகந்துகளை அவர்கள் நீக்கவேண்டும் என்று முன் வந்தால், அரசாங்கம் அந்த மகந்துகளை ஆதரிப். 960–19