பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309 மாஜிஸ்திரேட் : இந்த வாக்குமுலத்தில் தாங்கள் கையெழுத்திடுவீர்களா ? நேரு : இயலாது, இந்த விசாரணையில் நேருவுக்கு ஆறு மாத வெறுங்காவல் தண்டனை விதிக்கப் பெற்றது. o *H so ஐந்தாவது விசாரணை நேரு சிறைவாசம் முடிந்து 1930, அக்டோபர் 11-ந் தேதி வெளியே வந்தார். இந்திய தேசியவாதி களுக்கு விடுதலை என்பது சிறிய சிறையிலிருந்து இந்தியா என்னும் பெகிய சிறைச்சாலைக்கு வருவ தாகும். கேரு எட்டு காட்கள் மட்டும் சுதந்தரமாகச் சுற்றி வந்தார். ஒன்பதாவது நாளில் மீண்டும் கைது செய்யப் பெற்றர். சட்டத்தினால் ஏற்படுத்தப் பெற்ற பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராகத் துவேஷம் ஊட் டியதாக இந்தியப் பீனல் சட்டம் 124-ஏ பிரிவுப்படி அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. அத்துடன் அந்தச் சட்டத்தின் 117-வது பிரிவுப்படியும், 1930-ம் வருடத்திய ஆறவது அவசரச் சட்டம் 3-வது பிரிவுப் படியும் குற்றங்கள் சாட்டப் பெற்றன. இவைகளில் 124-ஏ பிரிவு மிகுந்த மகிமை பெற்ற தாகும். ஏனெனில் முன்பு லோகமான்ய திலகரும், மகாத்மா காந்தியும் அதன்படி குற்றம் சாட்டப் பெற்று ஒவ்வொருவரும் ஆறு ஆண்டுகள் தண்டனை பெற்றனர். பல்லாயிரம் இந்தியத் தேசபக்தர்களைச் சிறையில் அடைக்கவும், காடு கடத்தவும் இந்தப் பிரிவே பயன்படுத்தப் பெற்று வந்தது. கேருை