பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 அதன்படி விசாரணைக்குக் கொண்டு வந்ததில் அந்தச் சட்டம் மேலும் பெருமை பெற்றது. வழக்கம் போல் நேரு விசாரணையில் கலந்து கொள்ளவில்லை. சர்க்கார் தரப்புச் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யவுமில்லை. ஆனல் இறுதி யில் எழுத்து முலமான ஒரு வாக்குமுலத்தை மட்டும் அவர் பதிவு செய்தார். இந்த வழக்கில் 124-ஏ பிரிவுப் படி 18 மாதக் கடுங்காவலும், ரு. 500 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால், கூடுதலாக முன்று மாதக் கடுங்காவலும், 117-வது பிரிவுப்படி 8-மாதக் கடுங்காவலும், ரு. 100 அபராதமும், அபராதம் கட்டத் தவறில்ை, கூடுதலாக ஒரு மாதக் கடுங்காவலும், அவசரச் சட்டப்படி 6-மாதக் கடுங்காவலும், ரு. 100 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால், கூடுதலாக ஒரு மாதக் கடுங்காவலும் நேருவுக்குத் தண்டனை களாக விதிக்கப் பெற்றன. இவைகளில் 124-ஏ பிரிவுப்படியுள்ள தண்டனை தனியானது, பிந்திய இரு தண்டனைகளையும் ஏக காலத்தில் அநுபவிக்க வேண் டும் என்றும் விதிக்கப்பட்டது. நேருவும், அவருடைய தந்தையார் மோதிலால் நேருவும் அபராதங்களைச் செலுத்த மறுத்து விட்டதால், அவைகளுக்குரிய காவல் தண்டனைகளை ஒன்றின் பின் ஒன்றக (ஐந்து மாதங்கள்) அநுபவிக்க வெண்டுமென்றும் முடிவு செய்யப் பெற்றது. நீதித்தலத்தில் நேரு அளித்த வாக்குமூலத்தின் சிறப்பான பகுதிகள் வருமாறு : 'பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அதிகாரிகளால் நான் ஐந்தாவது முறையாகக் கைது செய்யப் பெற்று, பல விதக் குற்றங்கள் சாட்டப் பெற்றுள்ளேன். ஐந்தாவது தடவையாக நான் தண்டிக்கப் பெறுவேன் என்பதில்