பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

317

  • ஆகவே, உங்களிடமோ, போலீஸ் சுப்பிரண் டிடமோ எந்தவிதமான அநுமதியும் பெருமலே வழக்க மான என் வேலைகள் அனைத்தையும் செய்துவர கான் தீர்மானித்திருக்கிறேன் என்பதைத் தங்களுக்குத் தெரி வித்துக் கொள்கிறேன்...

வெளியிடங்களில் ஏதாவது வேலையிருந்தால், கான் அலகாபாத்தைவிட்டு வெளியே செல்வேன் என்பதையும் முக்கியமாகத் தங்களுக்குத் தெரிவித் துக்கொள்ள வேண்டியிருக்கிறது. 'என் கருத்துக்களை அவசியம் நேரும் போதெல் லாம் கான் வழக்கம் போல் வெளியே சொல்லியே தீருவேன்..." டி சம்பர் 26-தேதி நேரு அலகாபாத்திலிருந்து பம்பாய்க்குப் புறப்பட்டுச் செல்லும்பொழுது, ரயிலி லேயே கைது செய்யப்பட்டுச் சிறையில் வைக்கப் பெற்ருர். 1932, ஜனவரி 4-தேதி விசாரணை கடந்தது. அவசரச் சட்டப்படி விடுத்த உத்தரவை மீறியதாக அவர்மீது குற்றம் சாட்டப் பெற்றது. நீதித் தலத்தில் நேரு எழுந்து கின்று வாக்கு மூலம் கொடுக்க முன்வந்த சமயத்தில், அவருடைய பேச்சை அங்கிருந்தவர் எவரும் கேட்டுவிடக் கூடாது என்று கருதி, மாஜிஸ்திரேட் எல்லோரையும் நீதித் தலத்திற்கு வெளியே யிருக்குமாறு ஏற்பாடு செய்ய லார்ை. அப்பொழுது நேரு தாமும் பேச மறுத்து, 'இந்த அரசாங்கம் சாம்பலாக்கப்பட்டு விடும் 1 என்று கூறிக்கொண்டே, ஆசனத்தில் அமர்ந்துவிட்டார். ஆயினும், வழக்கம்போல், அவர் எழுத்து மூலமான தமது வாக்குமூலத்தை மட்டும் பதிவு செய் தார். அதன் விவரம் கீழேயுள்ளது :