பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

323 இங்கிலாந்து தெளிவுபடுத்த வேண்டும் என்று அது கோரிற்று. உலகில் ஜனநாயகத்தையும், சிறு நாடு களின் சுதந்தரத்தையும் காப்பது இலட்சியமா யிருக் தால், இந்தியாவில் நிலைமை என்ன ? போர் கின்ற பிறகு, இந்தியாவுக்குப் பூரண விடுதலை கிடைக்குமா? அப்படியால்ை இப்பொழுது, யுத்த காலத்திலேயே, இங்கிலாந்து இந்தியாவுக்கு இன்றியமையாத உரிமை களை வழங்கத் தயாரா யிருக்கிறதா ? இத்தகைய விளுக்களுக்குக் காங்கிரஸ் மகாசபை விடைகளே எதிர்பார்த்தது. மகாத்மா காந்தி, நேரு முதலிய தலை வர்கள், சுதந்திர இந்தியா நேச நாடுகளுக்குப் பெருங் துணையாக கிற்கும் என்றும், அடிமை இந்தியா அவை களுக்குப் பெரும் பாரமாகும் என்றும் விளக்கமாக எச்சரிக்கை செய்தனர். ஆயினும் பிரிட்டிஷ் அரசாங் கம் அவற்றை யெல்லாம் பொருட்படுத்தவில்லை. இந்திய அரசாங்கம் இந்தியப் பாதுகாப்புச் சட் டத்தை இயற்றி, அவசரச் சட்டங்களாலும், அடக்கு முறைகளாலுமே காட்டை ஆள முற்பட்டது. காங் கிரஸ் மந்திரி சபைகள் இராஜிநாமா செய்தன. காந்திஜி தலைமையில் தனிப்பட்ட நபர்களின் சத்தி யாக்கிரகம் ஆரம்பமாயிற்று. 1940, அக்டோபர் 17-ந் தேதி திரு. விநோபா பாவே முதல் சத்தியாக்கிர கியாகச் சிறை புகுந்தார். நேரு இரண்டாவது சத்தி யாக்கிரகியாக நவம்பர் 6-ந் தேதி சிறை செல்ல ஏற்பா டாகி யிருந்தது. ஆனல் அதற்கு முன்பாக, அக்டோ பர் 31-க் தேதியே அவர் கைது செய்யப் பெற்றர். ஐக்கிய மாகாணத்தில் லால்டிக்கி முதலிய மூன்று இடங்களில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்காக, இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி அவர்மீது மூன்று குற்றங்கள் சாட்டப் பெற்றன. குற்றம் ஒன்றுக்கு Fo கோரக்பூரிலுள்ள ஓரிடம்.