பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 ஒரு வருடம் கான்கு மாதங்கள் வீதம், மூன்று குற்றங் களுக்குமாக நான்கு வருடக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மாவட்ட மாஜிஸ்திரேட்டின் நீதித் தலத்தில், வழக்கம்போல், நேரு தாம் எழுதி வைத்திருந்த வாக்குமூலத்தைப் படித்தார். அதன் சில பகுதிகள் வருமாறு : 'எந்த நபரோ, அல்லது நபர்களின் கூட்டமோ, இந்திய மக்களிடமிருந்து அதிகாரம் பெருமலும், எந்த வகையிலும் அவர்களுக்குப் பொறுப்பாளிகளாக இல்லாமலும், தங்கள் எண்ணத்தை அவர்கள் மேல் சுமத்தி, கோடி கோடியான இந்தியர்களை, அவர்க ளிடமோ, அவர்களுடைய பிரதிநிதிகளிடமோ கலந்து கொள்ளாமலே, ஒரு பெரிய போரில் ஈடுபடுத்தியிருக் கக் கூடாது. இந்தப் போரும் அவர்களாகத் தேடிக் கொண்டதன்று. இத்தனையும் சுதந்தரத்தின் பெயரா லும், சுய நிர்ணய உரிமையின் பெயராலும், ஜன காயகத்தின் பெயராலும் செய்யப்பட்டிருப்பது ஆச் சரியமான விஷயம். இதில் விசேடப் பொருள் அடங்கி யிருக்கின்றது. இந்தப் போரே இந்தத் தத்துவங் களுக்காக நடைபெறுவதாகவும் சொல்லப்படுகின்றது. மாங்கள் இறுதியான முடிவுகளுக்கு வருவதில் தாமதம் செய்து பார்த்தோம்; காங்கள் தயங்கி நின் ருேம், பேசிப் பார்த்தோம்; சம்பர் தப்பட்ட எல்லாக் கட்சியினருக்கும் கெளரவமான ஒரு வழியைக் காண் பதற்கு நாங்கள் முயற்சி செய்தோம். காங்கள் தொல்வி யடைந்தோம். அதல்ை தவிர்க்க முடியாத ஒரு முடிவை காங்கள் தெளிந்துகொள்ள நேர்ந்தது. பிபி டி ஸ் அரசாங்கமோ, அதன் பிரதிநிதிகளாக M. பாவிலுள்ளவர்களோ சம்பந்தப்பட்ட அளவில், வங்க த் தட்டுமுட்டுச் சாமான்களைப் போலவே