பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

327 தங்கள் ஏகாதிபத்தியத்தைப் பழைய மாமுல் முறையி லேயே கடத்தி வரவும் சுதந்தரம் உண்டு என்று கருதினர்கள்......' +: "இங்கிலாந்திலுள்ள மக்களில் பெரும்பாலோர் ஏகாதிபத்திய முறையில் அலுத்துப் போயிருக்கின்ற னர் என்றும், உண்மையான புதிய முறை அமைய, வேண்டும் என்றும் நான் கம்புகிறேன். ஆனல் காங் கள் அவர்களுடன் நேரிடையாக எதுவும் செய்து கொள்ள முடியாது, இடையிலுள்ள அவர்களுடைய அரசாங்கத்துடன் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டி யிருக்கிறது, அந்த அரசாங்கத்தின் கோக்கம் என்ன என்பதைப் பற்றியும் எங்கள் மனத்தில் சந்தேகமில்லை. அந்த கோக்கத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, அதை எங்களால் முடிந்தவரை எதிர்த்தே கிற்போம். ஆதலால் எங்கள்மீது திணிக்கப்பெற்ற இந்தப் போரில் பங்குகொள்ள முடியாது என்றும், அதை உலகுக்கு அறிவித்துவிட வேண்டும் என்றும் காங்கள் தீர்மானித்துள்ளோம். இந்தப் போரினல் ஏற்கனவே பெரும் சேதம் ஏற்பட்டிருக்கின்றது. இது இன்னும் அதிகப் பயங்கரத்தையும் துயரத்தையும் உண்டாக் கும். போரில்ை கஷ்டப்படுவோர்களுக்கு காங்கள் மனப்பூர்வமாக ஆழ்ந்த அநுதாபம் காட்டுகிருேம். ஆல்ை இந்தப் போர், இப்போதுள்ள உலக அமைப்பை மாற்றி, சுதந்தரத்தையும் ஒத்துழைப்பை யும் அடிப்படையாகக் கொண்ட புதிய சமுதாய அமைப்பை ஏற்படுத்தும் புரட்சிகரமான நோக்கத் தைக் கொண்டிரா விட்டால், இதல்ை இன்னும் போர்கள் தொடர்ந்து கடந்துகொண்டே யிருக்கும், பலாத்காரம் அதிகரிக்கும், மிகுந்த அளவு காசமும் ஏற்படும்.