பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

329 திரத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தச் சரித்தி ரத்தை எதிர்காலத்தில் எழுதப் போகும் சரித்திரா சிரியர், பிரிட்டிஷ் அரசாங்கமும், பிரிட்டிஷ் மக்களும், உலகம் மாறி வருவதற்குத் தக்கபடி, தாங்கள் மாறிக் கொள்ள முடியாமல், முக்கியமான சந்தர்ப்பத்தில் தோற்றுவிட்டனர் என்று குறிப்பிட வேண்டி யிருக் கும். அவர், ஏகாதிபத்தியங்கள் இதே பலவீனத்தால் வீழ்ச்சியுற்ற கதியைப்பற்றி எண்ணிப் பார்த்து, இதை விதி என்று சொல்லக்கூடும். சில காரணங்கள் சிறிதும் தவறமல் சில முடிவுகளையே விளைவிக்கும். காரணங்கள் கமக்குத் தெரியும்; முடிவுகள் அவை களைத் தொடர்ந்து வந்தே தீரும்.' Hr է: 'இந்த விசாரணையிலோ, இதற்குப் பின்போ, எனக்கு என்ன ஏற்படப் போகிறது என்பது அற்ப விஷயம். தனி நபர்களின் முக்கியத்துவம் அதிக மில்லை; அவர்கள் வருவார்கள், போவார்கள், என் காலம் முடிவடையும்பொழுது கானும் சென்று விடு வேன். இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கான் ஏழு முறை விசாரிக்கப் பெற்றுத் தண்டிக்கப் பெற்றுள்ளேன். என் வாழ்க்கையில் பல்லாண்டுகள் சிறைக்கோட்டங்களின் சுவர்களுக்குப் பின்னல் புதைக்கப்பட்டுப் போயிருக்கின்றன. எட்டாவது முறையோ, ஒன்பதாவது முறையோ, மேலும் சில ஆண்டுகள் தண் டனேயோ அதிக வேற்றுமையை உண்டாக்கிவிடாது. ஆனால், இந்தியாவுக்கும், அவளு டைய கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கும், பெண்க ளுக்கும் ஏற்படக்கூடிய விஷயம் அற்பமானதன்று. அதுதான் என் முன்புள்ள பிரசினே. ஐய, முடிவாக உங்கள் முன்புள்ள பிரசினையும் அதுதான்...'