பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அவருக்கு அவரே அளவுகோல் காம் மனிதர்களைத் தேர்ந்தெடுத்த சொற்க2ளக் கூறிப் புகழ்கிருேம், மேன்மையை மதிப்பிட்டுச் சொல் லவும் காம் ஓர் அளவுகோலை வைத்துக் கொள்கிருேம். ஆல்ை அவரை நாம் எப்படிப் புகழ்வது, எப்படி மதிப் பிடுவது?-ஏனெனில் அவர்கம் எல்லோரையும் போலச் சாதாரணக் களி மண்ணுல் படைக்கப் பெற்றவர் அல் லவே அவர் தோன்றினர், ஒரளவு நீண்ட காலம் வாழ்ந்தார், புறப்பட்டுச் சென்று விட்டார். இந்தச் சபையில் அவரை நாம் புகழ்ந்து பேசவேண்டும் என் பது அவசியமில்லை, ஏனெனில் சரித்திரத்தில் உயிரோ டிருந்த எந்த மனிதரும் அடைந்ததைவிட அதிகப் புகழை அவர் அடைந்துள்ளார். அவர் இறந்த பிறகு இந்த இரண்டு மூன்று நாட்களாக உலகத்தின் வந்தனை அவருக்கு உரித்தாயிற்று; அதற்குக் கூடுதலாக நாம் என்ன சொல்ல முடியும்? அவருடைய குழந்தைகளா யிருந்த நாம், அவருடைய சொம்தப் பிள்ளைகளைவிட நெருங்கிய மக்களாக விளங்கிய நாம், அவரை எவ் பொறு புகழி முடியும் ? காம் அனைவருமே அவருடைய ஆன்மீகக் குழந்தைகளா யிருக்கிறேம், நாம் அந்தப் பெருமைக்குத் தகுதியற்றவர்களாயினும் நாம் அவரு டைய மக்களே. ஒரு பெரும் ஜோதி மறைந்து விட்டது, எந்தக் கதி ரவன் நம் வாழ்க்கையை ஒளிசெய்து கொண்டிருந் ததோ அது அஸ்தமித்து விட்டது, நாம் குளிரிலும் இரு ளிலும் கடுங்குகிருேம். ஆயினும் நாம் இம்மாதிரி ஏங்குவதை அவர் விரும்பியிருக்க மாட்டார். இத்தனை ஆண்டுகளாக நாம் கண்டு வந்த அந்த ஜோதி, தெய் விக நெருப்புடைய அந்த மனிதர், நம்மையும் மாற்றி விட்டார்-இன்று நாம் உள்ள நிலையில், நாம் இத்தனை ஆண்டுகளாக அவரால் உருவாக்கப் பெற்றவர்கள்;