பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 மெல்லாம் மானிட சமூகத்தின் பொதுவான கல8ன அடைய உதவியாகவும், ஒவ்வொரு தனி மனிதனும் தன் அறிவுக்கு உகந்த முறையில் வளர்ச்சியடை வதற்குப் பூரணமான வாய்ப்புக்களை அளித்தும் வக் தால்தான் அவைகளுக்கு மதிப்புண்டு. 15-ஆண்டு களுக்கு முன்ல்ை ஐக்கிய நாடுகளின் ஸ்தாபனம் பிர கடனம் செய்து ஏற்றுக்கொண்ட மானிட உரிமை களின் சாசனம் இந்தக் குறிக்கோளை அடைவதையே இலட்சியமாகக் கொண்டுள்ளது, அதாவது ஜாதி, மத, இன, மொழி வேற்றுமைகளையும், ஆண், பெண் வேற்றுமையையும் பொருட்படுத்தாமல், மா னி ட உரிமைகளையும், ஜீவாதாரமான சுதந்தரங்களையும் உலகெங்கும் காளுக்கு நாள் அதிகமாக மதிக்கும்படி செய்வதாகும். கொடுமையும், பூசலும், போர்களும் (உலக) வர லாற்றைக் கறைப்படுத்தியுள்ளன என்றல், அதற்கு முக்கியமான காரணம் மனிதனுக்கு மனிதன் இழைக் கும் இரக்கமற்ற கொடுமையே யாகும்; மற்றவர் களுடைய உரிமைகளையும், கெளரவத்தையும் மதிக்கா மல் இழிவுபடுத்துவதேயாகும். நாகரிகத்திற்கே பெரிய களங்கமாக உள்ள இந்தத் தீய சக்திகளை அறவே களைக்துவிட வேண்டுமானல், இன வேறுபாட்டால் ஏற் படும் அகம்பாவமும், அங்கியர்மீது அரசியல் ஆதிக்கி யம் செலுத்துவதும், பொருளாதார அரீதியும், ஏற் றத் தாழ்வுகளும் வெளிப்பட்டுத் தோன்றுவதை அகற்ற வேண்டும்; இத் தீய சக்திகள் இப்பொழுது காகரிகம் முழுவதையுமே அழித்துத் துடைத்துவிடக் கூடிய நிலையில் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஒருவரை யொருவர் பயமுறுத்திக் கொண்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டு உண்மையான சமா தானத்தை அடைய முடியாது, தனி மனிதர்களின்