பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 தும் காம் நம் ஆன்மாக்களை மீட்டுக் கொள்வதுடன், நாமாக வீழ்ந்துள்ள பள்ளங்களிலிருந்தும் மீட்சி பெற வேண்டும். மீண்டும் முன்னேற்றமடைவதற்கு காம் மிக வேகமாக மாறுதல்களைச் செய்ய வேண்டியிருக் கின்றது. -டிெ டிெ

  • +:

பழமையின் தொடர்ச்சியும் தேவை ஆல்ை, மாறுதல் அவசியமா யிருப்பது போல, மற்றெரு விஷயமும் முக்கியமாகும்-ஒரளவு தொடர்ச் சியும் அவசியம். மாறுதலும், தொடர்ச்சியும் எப்பொழு தும் சமநிலையில் இருக்க வேண்டும். ஒருநாள்கூட மற்றெரு நாளைப்போல் இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் நாம் வளர்ந்து கொண்டிருக்கிருேம். எனினும் நம்மிடம் ஒரு தொடர்ச்சி இருந்து கொண்டே யிருக் கின்றது, ஒரு தேசிய சமுகத்தின் வாழ்க்கையில் இடை யறத தொடர்ச்சி இருந்து வருகின்றது. மாறுதலும் தொடர்பும் சமநிலையில் நிகழ்ந்து வரும் முறையைக் கொண்டுதான் ஒரு தேசம் உறுதியான அடிப்படை களின் மீது வளர்ச்சி பெற முடியும். தொடர்ச்சி மட்டும் இருந்து, மாறுதல் இல்லாவிட்டால், தேக்கமும் அழிவும் ஏற்படும். தொடர்ச்சி இல்லாமல், மாறுதல் மட்டும் இருந்தால், அது வேரோடு பறிக்கப்பட்டது போலாகும் ; மக்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த இடங் களிலுள்ள தொடர்புகளை அறுத்துக் கொண்டால், அவர்களோ, நாடோ நீண்ட காலம் வாழ்ந்திருக்க முடியாது. -டிெ டிெ 事 # k